என் நோட்புக் கொண்டாட்டம்.. விராட் அப்புறம் என்னை விடவே இல்ல.. முடிச்சு விட்டுட்டாரு – கேஸ்ரிக் வில்லியம்ஸ் பேட்டி

0
415
Virat

விராட் கோலிக்கு எதிராக நோட்புக் கொண்டாட்டத்தை செய்த பிறகு இந்தியாவில் வைத்து என்ன நடந்தது என்பது குறித்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்திருந்த பொழுது விராட் கோலி விக்கெட்டை கைப்பற்றிய கேஸ்ரிக் வில்லியம் முதல்முறையாக நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டால். வெஸ்ட் இண்டீஸ் இந்தியா வந்த பொழுது இதை விராட் கோலி எப்படி முடித்து வைத்தார் என்பது குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

50 பந்தில் 94 ரன்கள்

வெஸ்ட் இண்டீஸ் வெள்ளை பந்து தொடர்களில் விளையாட இந்தியா வந்திருந்தது. அப்போது நடைபெற்ற டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 200க்கும் மேற்பட்ட ரன்கள் குறித்து இருந்தது. ஆட்டத்தின் முதல் பகுதியில் விராட் கோலியால் ரன்கள் எடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு இருந்தார். பெரிய இலக்கை துரத்துவதற்காக பந்தை வேகமாக அடிக்க முயற்சி செய்து தவறவிட்டார்.

பிறகு தன்னுடைய பாணியில் பந்தை டைம் மட்டுமே செய்து 50 பந்தில் ஆட்டம் இழக்காமல் 94 ரன்கள் குவித்து இந்திய அணியை வெல்ல வைத்தார். இந்த போட்டியில் கேஸ்ரிக் வில்லியம்ஸ் தனக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸில் செய்த நோட்புக் கொண்டாட்டத்தை ஞாபகத்தில் வைத்து, அவரது பந்துவீச்சை சிதறடித்ததுடன் விராட் கோலி திருப்பி நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் களத்திற்குள் வந்ததுமே இதை விராட் கோலி தன்னிடம் சொல்லிவிட்டார் என வில்லியம்ஸ் தற்பொழுது கூறியிருக்கிறார்.

- Advertisement -

அது முதலில் ஜமைக்காவில் நடந்தது

இதுகுறித்து கேஸ்ரிக் வில்லியம்ஸ் கூறும் பொழுது “நான் நோட்புக் கொண்டாட்டத்தை முதன் முதலில் ஜமைக்காவில் விராட் கோலிக்கு எதிராகத்தான் கொண்டாடினேன். நான் விரும்பியதாலும் என் ரசிகர்களுக்காகவும் அதை செய்தேன். ஆனால் விராட் கோலி அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை”

“அன்றைய போட்டி முடிந்ததும் நான் அவருடன் கைகுலுக்க சென்றேன். அவரும் நான் சிறப்பாக பதிவு செய்ததாக கூறி என்னுடன் கைகுலுக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். அத்துடன் எங்களுடைய வாழ்த்துக்கள் அங்கு முடிவுக்கு வந்துவிட்டது “

இதையும் படிங்க : நானோ பிசிசிஐயோ சொல்ற வரைக்கும்.. மக்கள் பொய்யான நியூஸ் எதையும் நம்ப வேண்டாம் – ஷமி கோரிக்கை

“மீண்டும் இந்தியாவில் விளையாட வந்த பொழுது விராட் கோலி நேராக என்னிடம் வந்தார் ‘ உன்னுடைய நோட்புக் கொண்டாட்டம் இங்கு வேலை செய்யாது. அதை நான் உனக்கு உறுதிப்படுத்துகிறேன்’ என்று கூறினார். நான் அவரிடம் ‘ வாயை மூடிக்கொண்டு பேட்டிங் செய். நீ குழந்தை போல் நடந்து கொள்கிறாய்’ என்று சொன்னேன். அதற்கு ‘ வாயை மூடிக்கொண்டு எப்படி பேட் செய்ய முடியும்?’ என்றார். பிறகு அன்றைய நாள் போட்டியில் அவர் வென்றார். மீண்டும் நாங்கள் இயல்பாக கைகுலுக்கி கொண்டோம். இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடிந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -