கேமன் தீவில் நடைபெற்று வரும் மேக்ஸ் 60 கரீபியன் டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்லஸ் பிராத்வெயிட் ஹெல்மெட்டை தூக்கி போட்டு சிக்ஸர் அடித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கரீபியன் வீரர்கள் எப்பொழுதும் கொண்டாட்டமாக இருக்கக்கூடியவர்கள். களத்தில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தாலும் அது பார்ப்பதற்கு மிகவும் ஈர்க்கக்கூடிய ஒன்றாக இருக்கும். பெரிய அளவில் கோபப்பட்டு மோசமாக நடந்து கொள்ள மாட்டார்கள். இந்த நிலையில் தான் கார்லஸ் பிராத்வெய்த் செய்த சம்பவம் பார்ப்பவர்களையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
2016 டி20 உலகக்கோப்பை நாயகன்
வெஸ்ட் இண்டீஸ் அணி 2016 ஆம் ஆண்டு டேரன் சாமி தலைமையில் டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியது. மேலும் இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றிய முதல் அணி என்கின்ற சாதனையையும் படைத்தது. இந்த உலகக் கோப்பை பலராலும் மறக்க முடியாத வகையில் அமைந்தது.
இதற்கு மிக முக்கியமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கார்லஸ் பிராத்வெயிட் இருந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் வீசிய கடைசி ஓவரில் நான்கு சிக்ஸர்களை தொடர்ந்து அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை தனி ஒரு வீரராக இவர் சாம்பியன் ஆக்கியதை யாராலும் மறந்து இருக்க முடியாது.
சிக்ஸருக்கு பறந்த ஹெல்மெட்
இப்படிப்பட்ட வீரர் சில காலமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் இல்லாமல் இருக்கிறார். தற்போது இவர் கேமன் தீவுகளில் நடைபெறும் மேக்ஸ் 60 டி10 தொடரில் நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார். இந்த நிலையில் நேற்று கிராண்ட் கேமல் ஜாகுவார் அணிக்கு எதிரான போட்டியில்தான் இப்படியான அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது.
அயர்லாந்தைச் சேர்ந்த ஜோஸ்வா லிட்டில் வீசிய ஷாட் வந்து ஒன்று பிராத்வெயிட் தோலை உரசி சென்றது. இந்த நிலையில் அவுட் அப்பீல் கேட்க அம்பயர் அவுட் கொடுத்து விட்டார். இதனால் பிராத்வெயிட் கடுமையான கோபமடைந்தார்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் கிரிக்கெட்ல என்ன நடக்குது தெரியுமா?.. வீரர்கள் மேல தப்பில்ல.. இவங்கதான் பெரிய தப்பு – அகமத் சேஷாத் விமர்சனம்
களத்திலேயே தன்னுடைய கோபத்தை பகிங்கரமாக அவர் வெளிப்படுத்தினார். மேலும் களத்தில் இருந்து வெளியேறும் பொழுது தன்னுடைய ஹெல்மெட்டை கழட்டி மேலே தூக்கிப்போட்டு, அதை பேட்டால் ஓங்கி அடித்தார். நல்ல உடல் பலம் கொண்ட அவர் அப்படி செய்யவும், பேட்டால் அடிபட்ட ஹெல்மெட் பந்து போல சிக்ஸருக்கு பறந்து சென்று விழுந்த காட்சி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும் இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது!
— Cric guy (@Cricguy88) August 25, 2024