பாகிஸ்தான் கிரிக்கெட்ல என்ன நடக்குது தெரியுமா?.. வீரர்கள் மேல தப்பில்ல.. இவங்கதான் பெரிய தப்பு – அகமத் சேஷாத் விமர்சனம்

0
58
Shehzad

பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி நோக்கி சென்று கொண்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அகமத் சேஷாத் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். மேலும் அவர் பாகிஸ்தான் அணியின் இந்த நிலைக்கு காரணம் வீரர்கள் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் அணி 2023 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை விளையாட வெளியில் வந்த பொழுது இருந்து பெரிய விமர்சனங்களை தோல்விகளால் சந்தித்து வருகிறது. அப்போது ஏற்பட்ட தோல்வியில் இருந்து இப்பொழுது வரை பாகிஸ்தான் அணியால் நிமிர முடியவில்லை. நேற்று சொந்த நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் தோற்க நிலைமை இன்னும் மோசமாக மாறியிருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் சரிவு

பாகிஸ்தான் அணியில் வீரர்கள் இடையே ஒற்றுமை இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அதைவிட முக்கியமாக எடுத்துக் கொண்டால் உள்நாட்டு கிரிக்கெட் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிறப்பான கட்டமைப்புகளை உருவாக்கத் தவறியதுதான் தேசிய அணியில் எதிரொலிப்பதாக பலர் கூறி வருகிறார்கள்.

பாகிஸ்தான அணி தங்கள் சொந்த சூழ்நிலையில் சில வருடங்களாக விளையாடிய பொழுது மிகவும் வெற்றிகரமான அணியாக வெளியில் தெரிந்தது. உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியை வைத்திருப்பதாகவும் பேசப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணி 2023 ஆம் ஆண்டு ஆசியக்கோப்பை விளையாட பாகிஸ்தான் நாட்டை தாண்டி வெளியில் வந்ததிலிருந்து, அந்த அணியின் பலவீனங்கள் வெளிப்படையாக வெளியில் தெரிய ஆரம்பித்தது.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் சரிவுக்கு யார் காரணம்?

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் நிலை என்னவென்றால் அவர்களுடைய சொந்த மண்ணில் வைத்து பங்களாதேஷ் அணி அவர்களை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டை இவ்வளவு கீழ் நிலையில் என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்தது கிடையாது.

பாகிஸ்தான் அணி இருளை நோக்கி செல்கிறது என நான் ஏற்கனவே கூறியிருந்தேன். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிலைமை பாகிஸ்தான் ஹாக்கி அணியின் நிலைமையை போல இருக்கிறது. எனவே நீங்கள் இதற்கு ஒரு குறுகிய கால முடிவுகளை எடுக்க முடியாது. ஆனாலும் பங்களாதேஷ் அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கவில்லை. இருந்தபோதிலும் இதற்கு வீரர்கள் மேல் தவறு இல்லை.

இதையும் படிங்க: ரூட் ஸ்டோக்ஸ் இல்ல.. இவர்தான் இங்கிலாந்தின் முக்கிய வீரர்.. இந்தியா ஆஸிக்கு இவரை பிடிக்காது – வாகன் கருத்து

பாகிஸ்தான் வீரர்கள் தங்களுடைய அணியில் எந்த வீரரை வெளியில் இருந்து சேர்க்க வேண்டும் என யாரும் வற்புறுத்துவது கிடையாது. இந்த விஷயத்தில் விளையாடிக் கொண்டிருப்பது கிரிக்கெட் வாரியம்தான். அவர்கள்தான் சரியான வீரர்களை உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து பாகிஸ்தான் தேசிய அணிக்கு கொண்டு வரவில்லை. தேசிய அணியில் இடத்தை நிரப்ப உங்களிடம் தரமான உள்நாட்டு வீரர்கள் இல்லை என்றால் நீங்கள் எத்தனை காலமாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -