2021 டி20 உலக கோப்பை தான் தனது கடைசி சர்வதேச போட்டி – ஓய்வை அறிவித்த சிஎஸ்கே வீரர்

0
3707
Dwayne Bravo CSK

அக்டோபர் மாதம் தொடங்க உள்ள டி20 உலகக்கோப்பையுடன் டுவெய்ன் பிராவோ ஓய்வு பெறுகிறார் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெய்ரன் போல்லார்ட் தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ஒரு வீடியோவை வெளியிட்டது.

அதில் அவர் கூறியதாவது, “ மூன்று ஃபார்ம்மட்டிலும் விளையாடிய பிராவோ ஏற்கனவே இரண்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது அவர் சொந்த ஊரில் தனது கடைசி டி20யில் விளையாட உள்ளார் ” என்றார்.

- Advertisement -

டி20 ஸ்பெஷலிஸ்ட் டுவெய்ன் பிராவோ

Dwayne Bravo T20

டுவெய்ன் பிராவோ, அக்டோபர் 2018ல் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர், மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆசைப்பட்டு டிசம்பர் 2019ல் டி20 போட்டிகளில் களமிறங்கினார்.மேற்கிந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக பிராவோ திகழ்கிறார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பையை இவர் இரண்டு முறை கைபற்றி உள்ளார். மேற்கிந்திய அணிக்காக, டுவெய்ன் பிராவோ 86 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து அவர் உலகம் முழுவதும் பல டி20 தொடர்களில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

ஐ.பி.எலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் இவரே.பௌலிங் மட்டும் இல்லாமல் பேட்டிங் மற்றும் பீல்ட்டிங் என அனைத்து துறையிலும் சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக விளையாடி உள்ளார். 20 ஓவர் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் பிராவோ எடுத்துள்ளார்.

- Advertisement -

பிராவோவின் அறிவிப்பு

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டி தான் சொந்த மண்ணில் என்னுடைய கடைசி போட்டி என்று டுவெய்ன் பிராவோ தெரிவித்தார். துரதிஷ்டவசமாக அப்போட்டி ரத்தாகிவிட்டது. 86 டி20 போட்டிகளில் 76 விக்கெட்டுகள் கைபற்றி உள்ளார். தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக 4/19 என்பதே அவரது சிறந்த பந்துவீச்சு. இதை அவர் சென்ற மாதம் தான் நிகழ்த்தினார். டெத் ஓவர்கள் என சொல்லப்படும் கடைசி 4 ஓவரில் சிறப்பாக பந்துவீசக் கூடியவர்.

அடுத்து வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். தனது கடைசி உலகக் கோப்பை என்பதால் முழு திறனையும் வெளிப்படுத்தி கோப்பையோடு ஓய்வு பெற வேண்டும் என்ற நோக்கில் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஐ.பி.எல், சி.பி.எல் போன்ற தொடர்களில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

- Advertisement -