உபியில் பிறந்து ஓமனுக்காக விளையாடும் குல்தீப் நண்பர்.. என்னுடைய குருவே தோனி தான்.. டிவியில் பார்த்தவர்களுடன் விளையாட போகிறேன்.. வினயக் ஷூக்லா

0
52

ஓமன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வினயக் ஷுக்லா, முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது குரு என்றும், அவரால் ஊக்கமடைந்ததாகவும் கூறியுள்ளார். 44 வயதான தோனி தனது உச்சகாலத்தில் ஆட்டங்களை முடித்த விதம் ஒப்பற்றது என்றும், ஒரு நாள் அவரை சந்திக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

வினயக் ஷுக்லா, உத்தரபிரதேசத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால், 2021 நவம்பரில் ஓமனுக்கு சென்று விளையாடினார். இது குறித்து பேசிய அவர்,”ஒரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக, எனது உத்வேகம் எப்போதும் மகேந்திர சிங் தோனி தான்.அவர் ஆட்டங்களை முடித்த விதமும், அணியை வழிநடத்திய விதமும் ஒப்பற்றவை.

- Advertisement -

தோனி என் குரு:

“அவர் எனது குரு. நான் அவரை ஒருபோதும் சந்திக்கவில்லை, ஆனால் சந்திக்க விரும்புகிறேன்.
ஒமனுக்கு வந்தது மிகவும் கடினமான முடிவாக இருந்தது. 2021 நவம்பரில் இந்திய கிரிக்கெட்டை விட்டு வெளியேறி, எனது கனவுகளைத் தொடர ஓமனுக்கு சென்றேன். நான் நேஷனல் மெட்டல் கேன்ஸ் நிறுவனத்தில் டேட்டா ஆபரேட்டராக பணிபுரிகிறேன். கான்பூரில், PAC கிரிக்கெட் மைதானம் போன்ற உள்ளூர் கிளப்களில் விளையாடத் தொடங்கினேன். பின்னர் பல்வேறு நகரங்களுக்கு சென்றேன்.”

“ஆனால் பிரச்சனை என்னவென்றால், மாநில அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் சில சீனியர்களிடம் பேசினேன். பின்னர் எனது பயிற்சியாளர்களில் ஒருவரான பிரகாஷ் பலாண்டே சாரிடம் சென்றேன். அவர் எனக்கு மஸ்கட்டுக்கு செல்ல வாய்ப்பு அளித்தார். அங்கு இரண்டு ஆண்டுகள் தங்க வேண்டும் என்றும், நன்றாக விளையாடினால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு  வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.”

- Advertisement -

குல்தீப் என் நண்பர்:

“நான் இந்தியாவில் குல்தீப் யாதவுடன் விளையாடியிருக்கிறேன், அதனால் விரைவில் அவரை சந்திப்போம் என்று நம்புகிறேன். பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடுவது எனக்கும் எனது அணிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த வீரர்களை நாங்கள் டிவியில் பார்த்து வளர்ந்தோம்.”

இதையும் படிங்க: ஒமன் மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கு எதிராகவும் பும்ராவுக்கு ஓய்வு கொடுங்கள்.. பங்கமாக சல்மான் படையை கலாய்த்த கவாஸ்கர்

“நான் மிகவும் பதற்றமாக இருக்கிறேன். ஆனால் உற்சாகமாகவும் உள்ளேன். கான்பூரில் குல்தீப் பாயுடன் ஆடிய போட்டிகளை நினைவு கூர்கிறேன்.”
அவர் ரோவர்ஸ் கிளப்புக்கு விளையாடினார். நான் PSE க்கு விளையாடினேன். நாங்கள் பல நட்பு ஆட்டங்களில் ஒன்றாக விளையாடினோம். ஒருமுறை அவர் எனக்கு பந்து வீசினார். நான் அவரை நான்கு ரன்களுக்கு அடித்தேன், அவர், ‘ஓ, மிக அருமையான ஷாட்!’ என்று கூறினார். அந்த இனிமையான நினைவுகளை நான் எப்போதும் பொக்கிஷமாக வைத்திருப்பேன்.”

- Advertisement -