உலக கிரிக்கெட்

40 பந்தில்.. 44 வயதான கிறிஸ் கெயில் ருத்ர தாண்டவம்.. வெஸ்ட் இண்டீஸ் சவுத் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸை வீழ்த்தியது

தற்போது இங்கிலாந்தில் உலக லெஜென்ட்ஸ் சாம்பியன்ஷிப் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இன்று வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் மற்றும் சவுத் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இதில் யுனிவர்சல் பாஸ் 44 வயதான கிறிஸ் கெயில் அதிரடியில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணி எளிதாக சவுத் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தியது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணியின் கேப்டன் கிறிஸ் கெயில் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்த சவுத் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ரிச்சர்ட் லெவி 14 பந்தில் 20 ரன்கள், கேப்டன் ஜாக் காலிஸ் 21 பந்தில் 18 ரன்கள் எடுத்தார்கள்.

இதற்கடுத்து ஜேக்கப் பால் டுமினி 25 பந்தில் 23 ரன், ஆஸ்வெல் பிரின்ஸ் 35 பந்தில் 46 ரன், டேன் விலாஸ் அதிரடியாக 17 பந்தில் 44 ரன்கள் எடுக்க, சவுத் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணியின் தரப்பில் ஜேசன் முஹம்மத் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிக்கு டிவைன் ஸ்மித் 24 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, அடுத்து கேப்டன் கிறிஸ் கெயில் மற்றும் வால்டர் இருவரும் இணைந்தார்கள். இந்த ஜோடி மிக அனாயசமாக சவுத் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கியது.

- Advertisement -

இந்த ஜோடியில் வால்டன் தன் பங்குக்கு கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 29 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். கிறிஸ் கெயில் வெற்றியை நெருங்கும் நேரத்தில் 40 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 175 ஸ்ட்ரைக் ரேட்டில் 70 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : 12 பந்தில் 13 ரன்.. 6 விக்கெட்.. தடுத்து நிறுத்திய ஷாருக்கான்.. 1 ரன்னில் நடராஜன் அணி தோல்வி.. டிஎன்பிஎல் 2024

இந்த போட்டியில் 44 வயதான கிறிஸ் கெயில் விளையாடுவதை பார்க்கும் பொழுது தற்போது அதிரடியாக விளையாடும் இளம் வீரர்களை விட சிறப்பாக இருக்கிறது. அவர் மிக அனாயசமாக பந்துகளை இன்னுமும் அடித்து நொறுக்கி கொண்டிருக்கிறார். இன்று அவர் விளையாடியது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்தது!

- Advertisement -
Published by

Recent Posts