ஐபிஎல் அணிக்கு மட்டும் தான் இவர் நன்றாக விளையாடுவார் ; சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு விருப்பம் இல்லை – வெஸ்ட் இண்டீஸ் வீரர் குறித்து ஆகாஷ் சோப்ரா அதிரடிப் பேச்சு

0
1099
Aakash Chopra

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடர் ஆக நடைபெற்ற இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் t20 தொடரிலும் ஒருநாள் தொடரை போலவே இந்திய அணி வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்துள்ளது. நேற்று நடந்த டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் இந்தியாவை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் சூரியகுமார் ஆகியோர் பேட்டிங்கில் கலக்கி, நல்ல ஸ்கோரை இந்திய அணிக்கு பெற்று தந்தனர். பந்துவீச்சை பொறுத்தவரை அனைத்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை சாய்த்துக் காட்டினர்.

இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக அனுபவ வீரர் பொல்லார்ட் இருந்தார். அவரின் அனுபவம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரிதும் கைகொடுக்கும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் அவர் இந்த தொடரில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் டக் அவுட் ஆனார். அதன் பிறகு நடந்த இரண்டு போட்டிகளிலும் அவர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. டி20 தொடரில் முதல் போட்டியில் 24 ரன்கள் அடித்து ஆரம்பித்தாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் 3 மற்றும் 5 என சொற்ப ரன்களை எடுத்தார்.

- Advertisement -

இதனை தற்போதைய வர்ணனையாளரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான ஆகாஷ் சோப்ரா தன்னுடைய யூடியூப் பக்கத்தில் மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆடுவதற்கு விருப்பமற்று இருப்பது போல பொல்லார்ட் ஆடுவதாகவும் அவர் பந்து வீசுவது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் காட்டுவதைவிட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இவர் சிறப்பாக விளையாடுகிறார் என்பதையும் ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

வெஸ்ட்இண்டீஸ் சீருடையில் பாதி திறமையை வெளிப்படுத்துகிறார் என்றும் மேலும் டி20 உலகக் கோப்பை தொடர் மற்றும் இந்திய தொடர் என இரண்டிலும் அவருடைய கேப்டன் திறமை பெருவாரியான ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் ஐபிஎல் தொடரில் எப்படி ஆடப் போகிறார் என்பதைக் காண மும்பை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.