திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் போல்லார்ட் – ரசிகர்கள் அதிர்ச்சி

0
233
Kieron Pollard

ட்வென்ட்டி ட்வென்ட்டி கிரிக்கெட் என்றாலே, அதிரடி என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது வெஸ்ட் இன்டீஸ் வீரர்களாகத்தான் இருப்பார்கள். கிறிஸ் கெயில், டிவைன் பிராவோ, கீரன் பொலார்ட் இதில் முக்கியமான வீரர்கள்.

கிறிஸ் கெயில் சர்வதேச போட்டிகளிலிருந்து விலகி இருந்தாலும், உலகின் மற்ற ட்வென்ட்டி ட்வென்ட்டி தொடர்களில் கலந்துகொள்ள தயாராகவே இருக்கிறார். டிவைன் பிராவோ மும்பையால் முதலில் வாங்கப்பட்டு, பின்பு சென்னை அணிக்கு வந்து, சென்னை அணியின் அடையாளமாகவே மாறிப்போய், தற்போது வரை சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

இதில் கீரன் பொலார்ட்டு ஐ.பி.எல் ஆரம்பமே சுவாரசியமானது. 2010-ஆம் ஆண்டு முதன் முதலில் ஐ.பி.எல் ஏலத்திற்கு வந்த கீரன் பொலார்ட் மும்பை அணியால் வாங்கப்பட்டதே, ஏலத்தில் அரிதான இரகசிய ஏலம் மூலம்தான். இரகசிய ஏலத்தின் மூலமாக மும்பை இவரை முதலில் வாங்க, அதிலிருந்து மும்பை அணியின் அடையாளமாக விளங்கிவருகிறார்.

கீரன் பொலார்ட் வெஸ்ட் இன்டீஸ் அணிக்காக முதலில் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அடுத்த 2008ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ட்வென்ட்டி ட்வென்ட்டி போட்டிகளில் அறிமுகமானார்.
இதுவரையில் வெஸ்ட் இன்டீஸ் அணிக்காக 123 ஒருநாள் போட்டிகளிலும், 101 ட்வென்டி ட்வென்டி போட்டிகளிலும் பங்கேற்றுள்ள பொலார்ட், தற்போது சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் உலகின் மற்ற பகுதிகளில் நடக்கும் ட்வென்ட்டி ட்வென்ட்டி தொடர்களில் விளையாடுவார் என்று தெரிகிறது!

- Advertisement -
- Advertisement -