நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. நான் அப்படி கொண்டாட காரணம் இதுதான்.. வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெவின் பேட்டி

0
252

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கெவின் சின்க்ளைர் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு சம்மர் சால்ட் அடித்த தனது கொண்டாட்டத்தினை வெளிப்படுத்தி அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஒல்லி போப் 121 ரன்கள் குவித்தார். கேப்டன் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி 69 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் ரன்கள் உயர உதவியினார்.

இந்த போட்டியில் முக்கியமாக ஹாரி ப்ரூக் பேட்டிங் ஆடிக் கொண்டிருந்தபோது 36 ரன்கள் குவித்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர் கெவின் சின்க்ளைர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஒவ்வொரு பந்துவீச்சாளரும் ஒரு விக்கெட்டை வீழ்த்திய பிறகு அவர்களது ஸ்டைலில் விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் கெவினும் சம்மர் சால்ட் அடித்து தனது விக்கெட்டை கொண்டாடினார்.

- Advertisement -

அதன் பிறகு கஸ் அட்கின்சனின் விக்கட்டையும் வீழ்த்தினார். இந்த நிலையில் சம்மர் சால்ட் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதற்கான காரணத்தை கூறிய கெவின் “இது எனது ட்ரேட் மார்க் செலிப்ரேஷன். எனக்கு எப்போது விக்கெட் கிடைத்தாலும் அனைவருக்காகவும் நான் இங்கிருந்து இதை செய்கிறேன். இது அனைத்தும் எனது எட்டு வயதில் இருந்து தொடங்கியது. எங்கள் பின்புற தோட்டத்தில் இதற்கான பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்தேன்.

நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும். பல வருடங்களுக்குப் பிறகு அதை முழுமையாக என்னால் செய்ய முடிந்தது. தற்போது எனது விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியினை வெளிப்படுத்த நான் இதை செய்து கொண்டிருக்கிறேன்” என்று 24 வயதான கெவின் கூறி இருக்கிறார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவருக்கு நேரடியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. குடாகேஷ் மோட்டி உடல் நலக்குறைவு காரணமாக வெளியேற, அவருக்கு பதிலாக மாற்று வீரராக இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க:அனல் பறக்கும் பந்துவீச்சு.. 5 நிமிடத்தில் தன் சாதனையை தானே உடைத்த மார்க் வுட்.. வேகத்தில் புது ரெக்கார்ட்

தற்போது தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. கேப்டன் பிராத்வெயிட் 48 ரன்கள் குவிக்க, மைக்கேல் லூயிஸ் 21 ரன்கள், மெக்கெயின்ஸ் 11 ரன்களும் குவித்து அவுட் ஆயினர். தற்போது அதான்சி 59 ரன்களும், ஹாஜ் 53 ரன்களும் குவித்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -