2வது டி20.. 207 ரன்.. தென் ஆப்பிரிக்கா திணறல்.. வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றி அசத்தல்

0
927
WI

தென் ஆப்பிரிக்கா அணி t20 உலக கோப்பைக்கு பயிற்சி பெறும் விதமாக வெஸ்ட் இண்டிஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. இந்த தொடரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி இருக்கிறது.

இந்தத் தொடரில் முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது போட்டி நேற்று இந்திய நேரப்படி இரவு 12:30 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இன்டிஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் பிரண்டன் கிங் 22 பந்தில் 36, கைல் மேயர் 16 பந்தில் 32, ஆண்ட்ரே ப்ளட்சர் 18 பந்தில் 29, ரொமாரியோ ஷெப்பர்ட் 13 பந்தில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். மிடில் வரிசையில் களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் சிறப்பாக விளையாடி 38 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் பீட்டர் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ரீசா ஹென்றிக்ஸ் 18 பந்தில் 34, குயிண்டன் டி காக் 17 பந்தில் 41 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்கள். ஆனால் இதை அதற்கு அடுத்து வந்த தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்ந்த நிலையில். மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டிஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு குடகேஷ் மோட்டி மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதையும் படிங்க : BAN vs USA.. 58 ரன் 9 விக்கெட்.. சிஎஸ்கே முஸ்தாபிசுர் கலக்கல்.. 11 ஓவரில் முடிந்த போட்டி

ஏற்கனவே முதல் போட்டியை வென்றிருந்த வெஸ்ட் இண்டிஸ் தற்பொழுது இரண்டாவது போட்டியையும் வென்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. மேலும் சொந்த நாட்டில் நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் மற்ற அணிகளுக்கு பெரிய சவால் கொடுக்கும் அணியாக தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணி மாறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!