பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றி அமெரிக்கா அதிர்ச்சி கொடுத்தது. இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஐந்து ஓவர்களில் அமெரிக்க அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. அமெரிக்க அணியின் சயான் ஜஹாங்கீர் 20 பந்தில் 18 ரன்கள், ஆண்ட்ரீஸ் கோஸ் 15 பந்தில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.
இதற்குப் பிறகு 46 ரன்கள் வரை விக்கெட் இல்லாமல் இருந்த அமெரிக்க அணி, மேற்கொண்டு 58 ரன்கள் மட்டும் சேர்த்து, 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுக்கு 14 ரன்கள் மட்டுமே எடுத்தது. நடுவில் கோரி ஆண்டர்சன் மட்டுமே 18 பந்துக்கு 18 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய முஸ்தஃபீஸூர் ரஹமான் 4 ஓவர்களில் 1 ஓவர் மெய்டன் செய்து 10 ரன்கள் மட்டுமே விட்டு தந்து 6 விக்கெட் கைப்பற்றினார்.
இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த பங்களாதேஷ் அணி அதிரடியாக விளையாடி 11.4 ஓவர்களில் இலக்கை எட்டி பத்து விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் தன்ஷித் ஹசன் 42 பந்தில் 58 ரன்கள், சவுமியா சர்க்கார் 28 பந்தில் 43 ரன்கள் எடுத்தார்கள்.
பங்களாதேஷ் அணி டி20 உலகக் கோப்பை தொடருக்கு பயிற்சி பெறும் விதமாக அமெரிக்காவுக்கு சென்றது. இந்த நிலையில் அவர்கள் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அமெரிக்கா அணியிடம் முதல் இரண்டு போட்டிகளையும் இழந்து வரலாற்று தோல்வி அடைந்தார்கள். ஏற்கனவே ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்படாதது பெரிய விமர்சனங்களை உருவாக்கியது.
இதையும் படிங்க : பட்லர் முதல் வீரராக சாதனை.. ஆர்ச்சர் கம்பேக்.. டி20ல் பாகிஸ்தானை இங்கிலாந்து சுலபமாக வென்றது
இந்த நிலையில் இதற்கு ஆறுதல் அடையும் வகையில், தற்பொழுது பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு மூன்றாவது போட்டியை வென்று இருக்கிறார்கள். இரண்டு தோல்விகள் அவர்களை வெளிப்படைய வைத்திருக்கிறது. டி20 உலகக்கோப்பையில் இதைத் தொடர்வார்களா? என்று பார்க்க வேண்டும்.