ஜஸ்ட் 137 ரன்.. பயம் காட்டிய பப்புவா நியூ கினியா.. வெஸ்ட் இண்டீஸ் தட்டு தடுமாறி வெற்றி

0
493
WI

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி போராடி சிறிய அணியான பப்புவா நியூ கினியா அணியை வென்றது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளம் புதிதாக இருக்கிறது என்கின்ற காரணத்தினால் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோமன் பவல் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அனுபவம் இல்லாத பப்புவா நியூ கினியா பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்தில் தடுமாறினார்கள்.

- Advertisement -

அந்த அணி ஏழு ரன்களுக்கு முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இதைத்தொடர்ந்து பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் வந்த சேசு பாவுவ் சிறப்பாக விளையாடி ஆறு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 43 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து கடைசி கட்டத்தில் வந்த கிப்ளின் டோரிகா ஆட்டம் இழக்காமல் 18 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் பப்பு நியூ கினியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. ரசல் மற்றும் அல்ஜாரி ஜோசப் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஜான்சன் சார்லஸ் கோல்டன் டக் ஆனார். அடுத்து தாக்குப்பிடித்து விளையாடிய நிக்கோலஸ் பூரன் 27 பந்தில் 27 ரன், பிரண்டன் கிங் 29 பந்தில் 34 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு அடுத்து பப்புவா நியூ கினியா அணியின் பந்து வீச்சு மிக கட்டுப்பாடாக மாறியது. அவர்கள் பந்துவீச்சில் இருந்து ரன்கள் கொடுக்கவே இல்லை. இன்னொரு பக்கம் கேப்டன் ரோமன் பவல் 14 பந்தில் 15 ரன், ரூதர்போர்டு 7 பந்தில் 2 ரன் என வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்கள். 16 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதையும் படிங்க : உண்மைய சொல்லிடறேன்.. இந்திய அணிக்கு பயிற்சியாளராவதை விட பெரிய கௌரவம் இல்லை – கம்பீர் பேச்சு

இந்த நிலையில் கடைசி நான்கு ஓவர்களுக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் ரோஸ்டன் சேஸ் 27 பந்தில் 42 ரன்கள், ஆண்ட்ரே ரசல் 9 பந்தில் 15 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 19 ஓவர்களில் இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறிய அணியாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் பப்புவா நியூ கினியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரிய பயத்தை உண்டாக்கியது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் உள்நாட்டு வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் பதட்டத்தில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!