104 ரன் வித்தியாசம்.. ஒரே ஓவரில் 36 ரன்.. பூரன் காட்டடி.. ஆப்கானை அடக்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி

0
300
Pooran

இன்று டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட சுவாரசியமான போட்டி செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஆப்கானிஸ்தான் அணியை பிரம்மாண்டமான ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் துவக்க ஆட்டக்காரர் பிரண்டன் கிங் 6 பந்தில் ஏழு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து ஜான்சன் சார்லஸ் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார்.

- Advertisement -

இந்த ஜோடி அதிரடியில் மிரட்டியது. அசமத்துல்லா ஓமர்சாய் வீசிய நான்காவது ஓவரில் மட்டும் இவர்கள் இருவரும் சேர்ந்து 36 ரன்கள் அடித்து நொறுக்கினார்கள். 38 பந்துகள் மட்டுமே விளையாடிய இந்த ஜோடி 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஜான்சன் சார்லஸ் 27 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ஷாய் ஹோப் 17 பந்தில் 25 ரன்கள், கேப்டன் ரோமன் பவல் 15 பந்தில் 26 ரன்கள் எடுத்தார்கள். ஒரு முனையில் சதத்தை நோக்கி வேகமாக முன்னேறிய நிக்கோலஸ் போறேன் இரண்டு ரன்னில் சதத்தை தவறவிட்டார். அவர் 53 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 98 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பதின் நைப் 2 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜட்ரன் 28 பந்தில் 38 ரன், அசமத்துல்லா ஓமர்சாய் 19 பந்தில் 23 ரன்கள் எடுத்தார்கள். ஆப்கானிஸ்தான அணி 16.2 ஓவர்களில் 114 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒபேட் மெக்காய் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : சூரியகுமார் யாதவ் ரோஹித் ஷர்மா இல்லை.. ஹர்சித் ராணா தேர்ந்தெடுத்த டாப் 3 டி20 பேட்ஸ்மேன்கள்

சி பிரிவில் இந்த இரண்டு அணிகளும் முதல் சுற்றில் மூன்று வெற்றிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தன. இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் மோதிய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஆப்கானிஸ்தான் அணியை மிக எளிதாக வீழ்த்தி தங்கள் பலத்தைக் காட்டி இருக்கிறது. ஆப்கானிஸ்தான அணி சூப்பர் 8 சுற்றில் இந்தியா இடம் பெற்றிருக்கும் குழுவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -