இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக மிகச் சிறப்பாக பந்து வீசியவர் இளம் பேகப்பந்து வீச்சாளரான ஹர்சித்ராணா.
இவர் சமீபத்தில் டி20 கிரிக்கெட்டில் தனது டாப் 3 பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுத்தார். அதில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இந்தியாவின் சூரியகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இல்லை.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 22 வயதான இளம் வேகபந்துவீச்சாளரான ஹர்ஷித்ராணா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் உலகின் டாப் டி20 பேட்ஸ்மேன் ஆன ஹென்றிக் கிளாசனுக்கு எதிராக அவர் கட்டுப்படுத்திய 12 ரன்கள் மறக்கமுடியாத போட்டியாக அமைந்தது.
மொத்தமாக இந்த ஐபிஎல் தொடரில் 11 ஆட்டங்களில் விளையாடி 19 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் இவருக்கு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஹர்சித்ராணா மற்றும் கொல்கத்தா அணியின் சிறந்த வீரர்கள் மூலம் இந்த ஆண்டும் மூன்றாவது முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியிருக்கிறது.
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில் நடைபெற்ற பேட்டியில் ஹர்சித் ராணாவிடம் டி20 கிரிக்கெட்டில் டாப் 3 பேட்ஸ்மேன்களைத் தேர்வு செய்யுமாறு கேட்கப்பட்டது. அதற்கு டாப் 3 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வது மட்டும் இல்லாமல் அதற்கான காரணத்தையும் ஹர்சித்ராணா விளக்கி இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி, ஜாஸ் பட்லர் மற்றும் குயின்டன் டி காக் ஆகிய மூன்று பேரை சிறந்த டி20 பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும் பொழுது
“விராட் பையா, நான் ஐபிஎல் பற்றி மட்டுமே பேசுகிறேன். ஆனால் விராட் கோலி ஒட்டுமொத்த அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்தவர். விராட் கோலியோடு சேர்த்து நான்பட்லர் மற்றும் டிகாக் ஆகியோரையும் தேர்வு செய்கிறேன். சூரியகுமார் யாதவ் மற்றும் கிளாசன் ஆகியோரை தேர்வு செய்யாதது குறித்து கேட்கிறீர்கள். அவர்களும் நல்ல வீரர்கள் தான். ஆனால் இந்த மூவருக்கு எதிராக நான் புதிய பந்தை வீசும் போது எந்த இடத்தில் வீசுவது, எந்த இடத்தில் பிட்ச் செய்வது என்பது குறித்து நான் கடினமாக யோசிக்க வேண்டும்.
இதையும் படிங்க:இந்தியா கூட எங்களுக்கு எதுக்கு மேட்ச் போட்டாங்க?.. இதை எதிர்த்து கேளுங்க – மிட்சல் ஸ்டார்க் கோபம்
டி காக்குக்கு நீங்கள் ஷாட் பிட்ச் பந்துகள் வீச முடியாது. அவர் அதை அற்புதமாக விளையாடுவார். அந்த பந்துகள் வீசுவதன் மூலம் அவரிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. பட்லரை நான் கடினமான பேட்ஸ்மேன் ஆக உணர்கிறேன். குறிப்பாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நான் பந்து வீசியபோது எனது பந்துவீச்சை அவர் அடித்து நொறுக்கினார். அவரிடம் எல்லா வகையான ஷாட்களும் இருப்பதால் அவருக்கு பந்து வீசுவது கடினம். விராட் கோலியும் அதே போன்ற ஒரு வீரர்தான். அவருக்கு எதிராக பந்து வீசும் போது பல திட்டங்களையும் நான் யோசிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.