அதிரடி 5 அரை சதங்கள்.. மாஸ் காட்டிய இங்கிலாந்து.. 2வது நாளிலேயே வெஸ்ட் இண்டீஸ் தோல்வி உறுதியானது.. முதல் டெஸ்ட்

0
157
England

தற்போது இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் இரண்டாவது நாளான இன்று ஏறக்குறைய போட்டியின் முடிவு தெரிந்து விட்டது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இங்கிலாந்து அணியின் கேப்டன் முடிவை சரியென நிரூபிக்கும் விதமாக இங்கிலாந்து அணிக்கு அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் கஸ் அட்கிட்ஸ்சன் ஏழு விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணி 121 ரன்கள் மட்டுமே எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக அறிமுக வீரர் மைக் லூயிஸ் 27 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவை கடைசியாக விளையாடிய டெஸ்டில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்தை ஆச்சரியப்படுத்தும் என்ற ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் மிஞ்சியது.

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் துவங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி 76, ஜெமி ஸ்மித் 70, ஜோ ரூட் 68, ஒல்லி போப் 57, ஹரி புரூக் 50 என மொத்தம் ஐந்து பேட்ஸ்மேன் அரைசதம் அடித்தார்கள். இங்கிலாந்து அணி சரியாக 90 ஓவர்களில் 371 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஜெய்டன் சீல்ஸ் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து 250 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேற்கொண்டு 171 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. கைவசம் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே இருக்கிறது.

இதையும் படிங்க : 5 விக்கெட்.. ஆர்சிபி ஆல்ரவுண்டர் அசத்தல்.. சேலம் அணியை கூலாக வென்றது நெல்லை.. டிஎன்பிஎல் 2024

இன்று இங்கிலாந்து பந்துவீச்சில் சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி போட்டிகள் விளையாடும் ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கிட்ஸ்சன் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். போட்டியில் இரண்டாவது நாளிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்வி 90% உறுதி செய்யப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -