இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கில் கேப்டன்சி எப்படி இருந்தது? மேலும் இந்திய அணிக்கு தற்போது எந்த மாதிரியான ஒரு வீரர் தேவை என்பது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தில் மிக மோசமாக விளையாடினார்கள். மேலும் இந்திய பீல்டர்கள் ஆட்டத்தை மாற்றக்கூடிய கேட்ச் வாய்ப்புகளை தொடர்ந்து வீணடித்தார்கள். இது இந்திய அணிக்கு முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை கொண்டு வந்திருக்கிறது.
கம்பீர் தடுமாறிய இடம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி இரண்டாகப் பிரிந்து பயிற்சி போட்டியில் விளையாடியது. இதில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் கொண்ட அணிக்கு எதிராக சர்துல் தாக்கூர் மிகச்சிறப்பாக விளையாடிய 76 பந்தில் அதிரடி சதம் அடித்தார்.
இதற்கு முன்பு வரை இந்திய பிளேயிங் லெவனில் நிதீஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் காணப்பட்டது. சிறந்த இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சர்துல் தாக்கூர் அதிரடியாக சதம் அடித்ததின் காரணமாக இறுதியில் அவருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் கடைசியில் அவர் அதிகம் பந்து வீசவுமில்லை பேட்டிங்கில் பெரிய பங்களிப்பும் செய்யவில்லை. இந்த இடத்தில் அணி தேர்வில் கம்பீர் தடுமாறி விட்டார்.
இப்படியான வீரர் தேவை
இதுகுறித்து நாசர் ஹுசைன் பேசும்பொழுது “விராட் மற்றும் ரோஹித் சர்மா இருந்த இடத்திற்கு கில் வந்திருக்கிறார். எனவே இது அவருக்கு எளிதாக இருக்காது. உதாரணமாக நேற்று ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களின் கால் தடம் இருந்த கடினமான இடத்தில் ரவீந்திர ஜடேஜா பந்து வீசி இருக்க வேண்டும். கிரிக்கெட் வர்ணனையில் ரவி சாஸ்திரி தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் கேப்டன் கில் இதை கண்காணித்து ரவீந்திர ஜடேஜாவிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இப்படியான பிரச்சனைகள் கேப்டனாக அவருக்கு இருக்கிறது”
இதையும் படிங்க : கம்பீர் டிரெஸ்ஸிங் ரூம்ல வச்சு காச்சி எடுங்க.. இந்த ரெண்டு பேர விடாதீங்க.. செஞ்சிதான் ஆகணும் – ரவி சாஸ்திரி கருத்து
“மேலும் இந்திய அணி துணை கண்டத்தில் விளையாடும் பொழுது சுழல் ஆல்ரவுண்டர்களாக ஜடேஜா வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் என மூன்று சிறந்த சுழல் ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் வெளியில் வரும் பொழுது வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டருக்கு தடுமாறுகிறார்கள். இந்த இடத்தில்தான் ஹர்திக் பாண்டியா தேவையாக இருக்கிறார். அவரை மாதிரியான ஒரு வீரர் இருந்தால் மொத்த பிரச்சனையும் முடிந்துவிடும்” என்று கூறியிருக்கிறார்.






