“கோலிய பவுலிங்ல வச்சு எதிர்பார்க்காத இதை செய்ய போறோம்!” – இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் வியப்பான தகவல்!

0
1993
Virat

இந்திய அணி லீக் சுற்றில் ஒன்பது போட்டிகளையும் வென்று அடுத்து அரைஇறுதியில் நியூசிலாந்து அணியை மும்பை மைதானத்தில் வருகின்ற 15ஆம் தேதி எதிர்த்து விளையாட இருக்கிறது.

தற்பொழுது இந்திய அணியில் பேட்டிங் வரிசை ஏழாம் இடம் வரைக்கும் மட்டும் இருக்கிறது. எட்டாவது இடத்தில் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டரை விளையாட வைப்பதற்கான முயற்சிகள் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் தற்பொழுது அந்த இடத்தை முகமது சமி ஆக்கிரமித்து விட்டார்.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி 5 முழுமையான பந்துவீச்சாளர்களுடன் விளையாடி வருகிறது. எனவே இந்திய அணிக்கு தற்பொழுது ஆறாவது பந்துவீச்சாளர் தேவையாக இருக்கிறார். குறிப்பாக எந்த பந்துவீச்சாளராவது காயப்படும் வேளையில் தேவையாக இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, சுப்மன் கில் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரை பந்து வீச வைத்தார். மேலும் தானும் பந்து வீசினார்.

நேற்றைய ஆட்டத்தில் ஆறாவது பந்துவீச்சாளருக்கான முயற்சியில் பந்து வீசிய நான்கு பேரில் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் விக்கெட் கைப்பற்றி அசத்தினார்கள். இந்திய அணிக்கு இது ஒரு நல்ல அறிகுறியாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் கூறும் பொழுது ” விராட் கோலி விக்கெட் எடுத்ததை பார்க்க நன்றாக இருந்தது. அது ஒரு அழகான செட்டப். அவர் அந்த நேரத்தில் பைன் லெக்கை கொஞ்சம் சரி செய்வதை பார்க்க முடிந்தது. அவர் எங்கே பந்து வீசப் போகிறார் என்பது குறித்து கேஎல்.ராகுலும் அறிந்திருந்தார். இது ஒரு அழகான செட்டப்.

விராட் கோலியை பந்துவீச்சில் எப்படி பயன்படுத்தலாம் என்று நான் ரோகித் சர்மாவிடம் பேசி வருகிறேன். அவர் புதிய பந்தில் ஸ்விங் செய்து வீச முடிந்தவர். இதனால் அவர் பவர் பிளேவிலும் பயன்படக்கூடியவர்.

விராட் கோலிக்கு பந்துவீச்சில் சவாலான இடம் என்பது அவர் ஆட்டத்தின் நடுவில் பந்து வீசுவதுதான். நேற்று அவர் அந்த பாக்ஸையும் டிக் செய்தார்.

அடுத்து நாங்கள் அவரை இறுதிக்கட்ட ஓவரை வீசுவதற்கு தள்ளப் போகிறோம். உண்மையில் அவரது பந்துவீச்சு வலது கை பேட்ஸ்மேன் களுக்கு கடினத்தை கொடுக்கும். அவரால் கூர்மையான யார்க்கரை வீச முடியும் என்று நம்புகிறேன். அதையும் பரிசோதனை செய்து பார்த்து விடுவோம்!” என்று கூறியிருக்கிறார்!