நாளை இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. திடீரென இலங்கை அணி சிறப்பாக செயல்பட இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் மழை வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்று பார்க்கலாம்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி டையில் முடிவடைந்தது. இதற்கு அடுத்து இரண்டாவது போட்டியில் இலங்கை அணி இடம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை அடைந்தது. இதன் காரணமாக இரண்டாவது போட்டியை வென்று தொடரை இந்தியா சமன் செய்ய வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.
1997 ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கை இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடர் வென்றது கிடையாது. எனவே இரண்டு முகத்தில் இருக்கும் இலங்கை கிரிக்கெட்டுக்கு இந்திய அணிக்கு எதிரான தொடர் வெற்றி மிகப்பெரிய உத்வேகத்தை கொடுக்கும் என்பதால் தொடரை வெல்வதற்கு இலங்கை அணி கடுமையாக போட்டியிடும்.
மேலும் இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தை எடுத்துக் கொண்டால் இங்கு ஆடுகளம் முழுக்க சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருக்கும். ஆவரேஜ் ஸ்கோர் 220 முதல் 230 இருக்கிறது. மேலும் ஆடுகளம் இரண்டாம் பகுதியில் மிகவும் மெதுவாக மாறி சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகத்தை அதிக அளவில் கொடுக்கும். எனவே டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதை இங்கு சரியானதாக அமைகிறது.
மேலும் நாளை மூன்றாவது போட்டி நடைபெறும் நாளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான 42 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக வானிலை அறிக்கை கூறுகிறது. மேலும் பகலில் வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், அது பகலின் பின் பாதியில் 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறையும் எனவும் வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
நாளைய போட்டியில் மழை குறுக்கிட்டு போட்டி நடைபெறாமல் டிராவில் முடிவடைந்தால், இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாளை மழை குறுக்கீடு எதுவும் இல்லாமல் இருந்தால்தான் இந்திய அணி தொடரை சமன் செய்து ஏற்பட்ட சரிவில் இருந்து வெளிவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் சம்பளம் உயர்வு.. இந்திய ரஞ்சி டிராபி வீரர்களை விட 5 மடங்கு குறைவு.. வெளியான தகவல்
எனவே இப்படியான சூழ்நிலை நிலவுகின்ற காரணத்தினால் இந்தியா-இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையே இந்த போட்டியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் நாளைய போட்டிக்காக ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்!