பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், உள்நாட்டில் கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு திருத்தப்பட்ட சம்பளப் பட்டியலை தற்போது அறிவித்துள்ளது.
ஆனால் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு இருக்கும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளப் பட்டியல் இந்திய உள்நாட்டு வீரர்கள் வாங்கும் சம்பளத்தை விட 5 மடங்கு குறைவாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவீன கால கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது இளம் வீரர்கள் அனைவரும் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், உள்நாட்டில் நடைபெறும் ரஞ்சி டிராபி மற்றும் ஏனைய டிராஃபிகளில் விளையாட ஆர்வமில்லாமல் இருப்பதும் சமீபத்தில் வெளிவந்த அறிக்கைகளில் தெரியவந்தது. ஏனென்றால் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடி சம்பாதிக்கும் பணத்தைவிட பிரான்சிஸ் டி20 லீக்குகளில் விளையாடினால் அதில் கிடைக்கும் பணம் என்பது பன்மடங்கு அதிகம்.
எடுத்துக்காட்டாக மிகப்பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஆண்டுதோறும் 5 கோடி முதல் ஏழு கோடி வரை சம்பளமாக வழங்கி வருகிறது. ஆனால் இந்திய வீரர்கள் உள்நாட்டில் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு ஆண்டுக்கு 17 கோடி வரை ரூபாய் சம்பளமாக பெறுகிறார்கள். இதை கணக்கிட்டு பார்க்கும்போது டி20 கிரிக்கெட்களில் வீரர்கள் பன்மடங்கு சம்பாதிக்கிறார்கள்.
இதை கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் ரஞ்சி டிராபி விளையாடும் ஒருசில உள்நாட்டு வீரர்களுக்கு அதிகபட்சமாக 75லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை சம்பளத்தை உயர்த்தியது. இந்த நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானில் விளையாடும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு முன்பு சம்பளம் 50,000 பிகேஆர் முதல் 3,00,000 பிகேஆர் வரை வழங்கப்பட்டு வந்தது. தற்போது வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு அதை உயர்த்தும் விதமாக 2,50,000 பிகேஆர் முதல் 5,50,000 பிகேஆர் வரை உயர்த்தியுள்ளது.
அதாவது பாகிஸ்தான் வீரர்கள் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெறுவார்கள். சில இந்திய உள்நாட்டு வீரர்கள் அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வரும் நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் 20 லட்சம் சம்பளம் பெறுவது ஐந்து மடங்கு குறைவாக உள்ளதை காட்டுகிறது. ஐசிசி லாபம், மத்திய ஒப்பந்தங்கள், பிஎஸ்எல் என எதுவாக இருந்தாலும் இந்திய வீரர்களை விட பாகிஸ்தான் வீரர்கள் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்.
இதையும் படிங்க:ஜெயிஸ்வாலுக்கு இந்த 2 பேர்.. கழுத்து வரைக்கும் போட்டியா இருப்பாங்க.. முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் பேட்டி
இரண்டு சீசன்களுக்கு முன்பாக மகளிர் ஐபிஎல் தொடரில் மகளிர் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, பிஎஸ்எல் தொடரில் பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் ஆசம் சம்பாதிப்பதை விட அதிகமாக சம்பாதிக்கிறார் என்று தெரியவந்துள்ளது. இருநாட்டு உள்நாட்டு வீரர்களின் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களை விட ஐந்து மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு இந்திய உள்நாட்டு வீரர்கள் குறைந்தபட்சம் 10 ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடினால் முழு சீசனிலும் 75 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.