நாளைக்கு இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் மத்திய பிரதேஷ் குவாலியர் மைதானத்தில் நடக்க இருக்கிறது. ஆனால் இந்த போட்டியில் மழை பெரிய அச்சுறுத்தலை கொண்டு வருகிறது.
மூன்று கோட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளையும், மற்ற இரண்டு டி20 போட்டிகள் அக்டோபர் 9 மற்றும் அக்டோபர் 12ஆம் தேதிகளில் நடக்க இருக்கிறது. மேலும் நீண்ட நாட்கள் ஓய்வில் இருந்து வரும் இந்திய வெள்ளை பந்து அணிகளின் வீரர்கள் இந்த போட்டிக்காக மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
14 வருட சரித்திர சச்சின் வரலாறு
இந்த மைதானத்தில் கடைசியாக இந்திய அணி 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல்முறையாக 200 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.
இதைத்தொடர்ந்து 14 வருடங்களுக்குப் பிறகு நாளை தான் இந்திய அணி மோதும் ஒரு சர்வதேச போட்டி நடைபெற இருக்கிறது. எனவே இந்தப் போட்டிக்கு குவாலியர் நகரத்தில் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இப்படியான நிலையில்தான் வானிலை மிகவும் கவலை தரும் விதத்தில் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
போட்டியை மழை நடக்க விடுமா?
தற்போது குவாலியரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என வானிலை அறிக்கை உறுதியாக தெரிவிக்கிறது. ஏற்கனவே மழை பெய்து வருகின்ற ஈரம் மைதானத்தில் இருப்பதாலும், போட்டியின் போதும் நிச்சயம் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதாலும், இந்தப் போட்டி குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியாக நடந்தாலே ஆச்சரியம்தான் என்று கூறுகிறார்கள்.
இதையும் படிங்க : இலங்கை 2 தொடர்கள்.. புதிய வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. 4 நட்சத்திர வீரர்கள் புறக்கணிப்பு.. டேரன் சமி விளக்கம்
இப்படியான நிலையில் நிலைமை மோசமாக இருந்தாலும் கூட போட்டி அமைப்பாளர்கள் மழை ஏதாவது இடைவெளி கொடுத்தால் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியாகவாவது நடத்தி விடுவதற்கு தேவையான எல்லா முன்னேற்பாடுகளையும் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து மைதான ஊழியர்களுடன் இணைப்பில் இருந்து கவனித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.