இலங்கை 2 தொடர்கள்.. புதிய வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. 4 நட்சத்திர வீரர்கள் புறக்கணிப்பு.. டேரன் சமி விளக்கம்

0
756
Pooran

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது. தற்போது இதற்கான இரண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

உள்நாட்டில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை நிச்சயம் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அரை இறுதிக்கு முன்னேற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வெள்ளை பந்து அணிகளுக்கு சில புதிய வீரர்களை கண்டறிவதற்கான முயற்சியில் பயிற்சியாளர் டேரன் சமி ஈடுபட்டு இருக்கிறார்.

- Advertisement -

நான்கு நட்சத்திர வீரர்கள் புறக்கணிப்பு

தற்போது வெள்ளை பந்து தொடர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சில புதுமுக வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறார்கள். அதே சமயத்தில் நிக்கோலஸ் பூரன், ஹெட்மையர் ஆண்ட்ரே ரசல் மற்றும் அக்கேல் ஹுசைன் என நான்கு வீரர்கள் தொடரை புறக்கணித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து தலைமை பெயர்ச்சியாளர் டேரன் சமி கூறும் பொழுது “எங்களது இலங்கை சுற்றுப்பயணம் எங்களுடைய ஆழத்தை கண்டறிவதற்கும் வெவ்வேறு சூழ்நிலைகளில் எங்களுடைய வீரர்களை மதிப்பிடுவதற்கும் எங்களுக்கு உதவி செய்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணிகளில் பல மூத்த வீரர்கள் தங்களுடைய காயம் மற்றும் மறுவாழ்வுக்காக ஓய்வு வாங்கி இருக்கிறார்கள். அதே சமயத்தில் இந்த அணி இலங்கை அணிக்கு எதிராக வலுவாக போட்டியிடும் திறமையில் நாங்கள் நம்பிக்கை கொண்டு இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்”

- Advertisement -

அறிவிக்கப்பட்ட இரண்டு அணிகள்

டி201 அணி: ரோவ்மேன் பவல் (கே), ரோஸ்டன் சேஸ் (து. கே), ஃபேபியன் ஆலன், அலிக் அதானாஸ், ஆண்ட்ரே பிளெட்சர், டெரன்ஸ் ஹிண்ட்ஸ், அல்ஸாரி ஜோசப், ஷாய் ஹோப், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடாகேஷ் மோட்டி, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் ஷமர் ஸ்பிரிங்கர்.

ஒருநாள் அணி: ஷாய் ஹோப் (கே),
அல்சாரி ஜோசப் (து. கே), ஜூவல் ஆண்ட்ரூ, அலிக் அதானாஸ், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோட்டி, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.

இதையும் படிங்க : நாளை பங்களாதேஷ் டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. கம்பீரின் வித்தியாச முடிவுகள்.. அதிரடி மாற்றங்கள்

இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 13ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 20 ஆம் தேதி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -