இந்தியா vs அமெரிக்கா.. நாளை போட்டியில் மழை வாய்ப்பு.. மைதான நிலவரம்.. முழு தகவல்கள்

0
167
T20iwc2024

ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நாளை நியூயார்க் நாசாவ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து மழை அச்சுறுத்தி வரும் நிலையில் நாளைக்கான நியூயார்க் வானிலை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நியூயார்க் நாசாவ் ஆடுகளம் பலரது விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. 119 ரன்கள் எடுத்த இந்திய அணி பாகிஸ்தான் அணியை 113 ரன்கள் சுருட்டி வெற்றி பெற்றது. நேற்று 113 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்கா 109 ரன்களுக்கு பங்களாதேஷ் அணியை சுருட்டி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த அளவிற்கு இந்த குறிப்பிட்ட ஆண்டு காலத்தில் ரன்கள் எடுப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்தாலும் கூட இறுதி கட்டத்தில் அடித்து விளையாட வேண்டும் என்று நினைத்தால் முடிவதில்லை. பந்தை தட்டி விளையாட மட்டுமே இந்த ஆடுகளத்தில் முடிகிறது.

எனவே நாளை இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியிலும் ஆடுகளத்தில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது. 130 ரன்கள் இங்கு பெரிய சவாலான ஸ்கோராக இருக்கும் என்று இதுவரையிலான போட்டியின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. பவர் பிளேவில் 40 ரன்கள் கிடைத்தால் அதற்கு மேல் பந்துக்கு பந்து ரன் எடுத்தால் கூட போதும். எனவே நாளை இரு அணிகளும் இதை நோக்கி விளையாடலாம். ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரானது போல அதிரடியாகவே விளையாட விரும்புகிறது என்று தெரிகிறது.

மேலும் நடப்பு டி20 தொடர் முழுக்க நியூயார்க் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மழைக்கான அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் நாளைய போட்டியில் மழை அச்சுறுத்தல் எதுவும் இருக்காது என நியூயார்க் வானிலை அறிக்கை கூறுகிறது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 16வது ஓவர் இமாத்துக்கு என் பிளான் இதுதான்.. கேப்டன்கிட்ட கேட்டு வாங்கினேன் – அக்சர் படேல் பேச்சு

இத்தோடு காற்றில் ஈரப்பதம் வழக்கம் போல 50 சதவீதம் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. வெப்பநிலை குறைந்தபட்சம் 12 டிகிரி செல்சியஸ் அதிகபட்சம் 18 டிகிரி செல்சியஸ் இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது. ஆனால் நாளை போட்டி நடைபெறும் நேரத்தில் அதிகபட்சம் வெப்பநிலை குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.