நாளை கான்பூர் 2வது டெஸ்ட்.. கவலை தரும் மழை வாய்ப்பு.. ஆடுகளம் மற்றும் மைதான புள்ளி விபரங்கள் – முழு தகவல்கள்

0
214
Virat

இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை உத்தர பிரதேஷ் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மழை குறுக்கீடு பற்றிய அறிவிப்புகள் மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் ஒவ்வொரு போட்டியின் முடிவும் ஒவ்வொரு அணிக்கும் மிகவும் முக்கியமாக அமைந்திருக்கிறது. எனவே இந்த போட்டியில் மழை குறுக்கீடு இருக்கும் என்று கூறப்படுவது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறுவதில் சில பிரச்சனைகளை கொண்டு செய்யலாம்.

- Advertisement -

கான்பூர் டெஸ்ட் கவலை தரும் வானிலை அறிக்கை

இந்த போட்டி தொடங்கும் செப்டம்பர் 27ஆம் தேதி 90% மழைக்கான வாய்ப்பு, இரண்டாவது நாளில் 80 %, மூன்றாவது நாளில் 50% மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடைசி இரண்டு நாட்கள் வானிலை மிகவும் தெளிவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கடைசி இரண்டு நாட்கள் வானிலை நன்றாக இருந்தாலும் கூட, கான்பூர் மைதானத்தின் மழை நீர் வடிகால் வசதி சுமாராக இருக்கின்ற காரணத்தினால் சிறிய மழை பெய்தால் கூட பெரிய அளவிற்கு போட்டி பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கொஞ்சம் கன மழை பெய்தால் ஒரு நாள் போட்டி கூட ரத்து செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த செய்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் கவலையை உண்டாக்கி இருக்கிறது.

- Advertisement -

ஆடுகளம் மற்றும் மைதான புள்ளி விபரங்கள்

கான்பூர் ஆடுகளம் களிமண்ணால் உருவாக்கப்படும் கருப்பு ஆடுகளமாகும். இங்கு பந்து மெதுவாகவும் தாழ்வாகவும் செல்லும். புது ஆடுகளமாக இருக்கும் பட்சத்தில் கொஞ்சம் பேட்ஸ்மேன்களுக்கு முதல் இரண்டு நாட்களில் சாதகம் இருக்கும். கடைசி மூன்று நாட்கள் முழுக்க சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

இங்கு மொத்தம் 23 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற இருக்கிறது. இதில் இந்திய அணி 7 போட்டிகளில் வென்று இருக்கிறது, மற்ற அணிகள் 3 போட்டிகளில் வென்று இருக்கின்றன. 13 போட்டிகள் டிராவில் முடிவடைந்து இருக்கிறது.

இதையும் படிங்க : நாளை பங்களாதேஷ் 2வது டெஸ்ட்.. இந்திய உத்தேச பிளேயிங் XI.. பும்ரா இல்லையா?.. 1 முக்கிய மாற்றம்

இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 7 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் மூன்று முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன. மேலும் இங்கு நான்கு இன்னிங்ஸ்களின் ஆவரேஜ் ஸ்கோராக 370, 322, 253, 137 ரன்கள் இருக்கின்றன. தற்போது விளையாடும் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா 4 இன்னிங்ஸ்களில் இந்த மைதானத்தில் 143 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -