இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான வானிலை மற்றும் மைதான புள்ளி விபரம்.
நாளை இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தகுதி பெறுவதற்கு இரண்டு அணிகளுக்குமே இது முக்கியமான போட்டியாக அமைந்திருக்கிறது.
ஆடுகளம் மற்றும் மைதான புள்ளி விபரங்கள்
மும்பை வான்கடே மைதானத்தில் இதுவரை இந்திய அணி 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. 12 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று, 7 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. 7 போட்டிகள் டிராவில் முடிவடைந்து இருக்கின்றன. மேலும் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 11 முறையும் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் எட்டு முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன.
பொதுவாக மும்பை மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக சிவப்பு மண்ணில் அமைக்கப்பட்டிருக்கும். பவுன்ஸ் எதிர்பார்க்கப்பட்டதை விட கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். மேலும் கடைசி நாளில் பேட்டிங் செய்வது கடினமாக மாறும். எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே வாய்ப்புகள் மிக அதிகம்.
வானிலை அறிக்கை
நாளை போட்டி துவங்கும் முதல் நாளில் 65 சதவீதம் மழை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் மற்ற நான்கு நாட்களும் மழை வாய்ப்பு சுத்தமாக கிடையாது என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க : நாளை கடைசி டெஸ்ட்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. கம்பீர் வைத்திருக்கும் ரகசியம்.. மாற்றம் இருக்குமா?
மேலும் நாளை பகல் 2 மணி வரை வானம் தெளிவாக இருக்கும் என்கின்ற காரணத்தினால் போட்டி குறிப்பிட்ட நேரத்தில் துவங்கும் என்றும், ஆனால் அதற்குப் பிறகு கனமழை பெய்யும் என்று கூறப்பட்டிருக்கிறது.