“நாங்க ஜெயிச்சது நியூசிலாந்து பவுலர்களை பார்த்துதான்.. எங்களுக்கு அதுல இந்த விஷயம் கிடைச்சது!” – தென் ஆப்பிரிக்கா ஆட்டநாயகன் பேச்சு!

0
777
Van der

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 190 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி சுற்றையும் ஏறக்குறைய எட்டி இருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு, அந்த அணியின் குயிண்டன் டி காக் மற்றும் வான்டர் டேசன் இருவரும் சதங்கள் அடித்து அற்புதமான துவக்கம் தந்தார்கள். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

இதற்கடுத்து வந்த டேவிட் மில்லர் 30 பந்துகளில் அதிரடியாக 53 ரன்கள் குவிக்க, 320 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்க அணி 357 ரன்கள் குவித்தது.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணியை 167 ரன்களுக்கு சுருட்டி, 190 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா மூன்று துறைகளிலும் அட்டகாசமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது.

மேலும் 133 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்ற வான்டர் டேசன் பேசும் பொழுது ” அவர்கள் ஆரம்பத்தில் மிக நன்றாக பந்து வீசினார்கள். எங்களுடைய ரன் ரேட் ஓவருக்கு நான்குதான் இருந்தது. நாங்கள் ரன்களுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. நாங்கள் ஒன்றாக சேர்ந்து பேட்டிங் செய்தோம்.

- Advertisement -

இந்த இடத்தில் குயினி என்னை நன்றாக வழி நடத்தினார். பந்து கொஞ்சம் மென்மையாக மாறியதும் நாங்கள் அதிரடியாக விளையாட ஆரம்பித்தோம்.

இந்த விக்கெட்டை பொறுத்தவரை, பந்தை சரியான லென்த்தில் அடிக்கும் பொழுது விளையாடுவதற்கு கடினமாக இருந்தது. பந்துவீச்சாளர்களுக்கு ஏதோ ஒரு நன்மை கிடைத்தது. நாங்கள் இந்த விஷயத்தை எங்கள் பந்துவீச்சாளர்களிடம் தெரிவித்தோம்.

நாங்கள் இறுதியாக 300 முதல் 320 ரன்கள் எடுப்போம் என்று நினைத்தோம். ஆனால் எங்களுடைய மிடில் ஆர்டருக்கு வானமே எல்லை. ஒரு பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது முழுக்க முழுக்க ஒட்டுமொத்தமாக அணிக்கு கிடைத்த வெற்றி!” என்று கூறியிருக்கிறார்.

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் உள்ளே நுழைந்த தென் ஆப்பிரிக்க அணி, தற்பொழுது 7 போட்டிகளில் ஆறு வெற்றிகள் பெற்று, 12 புள்ளிகள் உடன், மேலும் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது!