10 போட்டி 200 ரன் கூட எடுக்கல.. ஜெய்ஸ்வாலை வச்சிக்கிட்டு கில்லை ஊட்டி வளர்க்கிறது நியாயமா? – இர்பான் பதான் கேள்வி

0
63
Irfan

தற்போது இந்திய டி20 அணியில் ஜெய்ஸ்வால் இல்லாதது துணை கேப்டன் சுப்மன் தில்லுக்கு தானாகவே பெரிய அழுத்தமாக மாறி வருவதாக இர்பான் பதன் தெரிவித்திருக்கிறார்.

சுப்மன் கில் கடந்த பத்து டி20 போட்டிகளில் முழுதாக 200 ரன்கள் கூட எடுக்கவில்லை. அதே சமயத்தில் ஜெய்ஸ்வால் தனி ஒரு வீரராக போட்டியை வெல்லக்கூடிய திறமையை பெற்றவராக இருக்கிறார். அவர் தற்போது 160 ஸ்ட்ரைக் ரேட் டி20 கிரிக்கெட்டில் வைத்திருக்கிறார். ஆனாலும் அவருக்கு அணியில் இடமில்லை.

- Advertisement -

கில்லுக்கு ஸ்பெஷல் அழுத்தம்

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசும்பொழுது “கில் கடந்த பத்து இன்னிங்ஸ்கள் பார்க்கும் பொழுது அவர் முழுதாக 200 ரன்கள் கூட எடுக்கவில்லை. எனவே அவர் மீது அழுத்தம் நிச்சயம் இருக்கும். அவருக்கு வாய்ப்புகளும் ஆதரவும் கிடைக்கிறது. அதை அவர் சிறந்த செயல் திறனாக மாற்ற வேண்டும் ஆனால் அது இன்னும் நடக்கவில்லை”

“ஐபிஎல் தொடரில் நாம் பார்த்த ஒரு சிறந்த வீரர் ஜெய்ஸ்வால். அவருடைய ஸ்டிரைக் ரேட் 160 என மிகச் சிறப்பாக இருக்கிறது. கில் வழக்கமாக வாய்ப்புகளை பெற்று, ஜெய்ஸ்வால் மாதிரியான ஒரு வீரர் அணியில் விளையாட முடியாமல் போகும் பொழுது, அவர் மீது அழுத்தம் அதிகரிக்கும். எனவே இதை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்”

- Advertisement -

இரட்டை சதம் அடிப்பார்

“கில் தற்போது தொடர்ந்து ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இல்லையென்றால் தற்போது இந்திய ஒரு நாள் மற்றும் டி20 அணிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வரும் ஜெய்ஸ்வால் மிகவும் திறமையான வீரர். அவர் பல அற்புதங்களை செய்வார்”

இதையும் படிங்க : கில் எதுக்கு துணை கேப்டன்?.. கம்பீர் அடுத்து இந்த தப்பெல்லாம் வரிசையா பண்ணுவாரு – ஸ்ரீகாந்த் விமர்சனம்

“ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதமும் டி20 கிரிக்கெட்டில் சதமும் அடிக்க முடிந்த வீரர். தனி ஒருவராகவே போட்டிகளை வெல்ல முடிந்தவர். எனவே அவரைப் போன்ற ஒருவர் வெளியே அமர்ந்திருப்பது இந்திய அணி நிர்வாகம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -