0-3-னு பும்ராவுக்கு சீரிஸ தர மாட்டோம்.. 3வது போட்டியில் கட்டாயம் கம்பேக் பண்ணுவோம் – அயர்லாந்து கேப்டன் சவால்!

0
867
Stirling

அயர்லாந்து அணி இந்த ஆண்டும் தனது சொந்த மண்ணில், இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை, முதல் இரண்டு போட்டிகளில் தோற்று தற்போது இழந்திருக்கிறது!

மேலும் அயர்லாந்து அணி இந்திய அணிக்கு எதிராக டி20 போட்டியில் இதுவரை எந்த வெற்றியையும் பெற்றதில்லை. இந்திய அணி இளம்வீரர்களைக் கொண்டு பும்ரா தலைமையில் இந்த முறை பயணம் செய்திருந்தது.

- Advertisement -

எனவே முதல்முறையாக அயர்லாந்து இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முன்பு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் டி20 தொடரை இழந்திருந்ததும் இந்த நம்பிக்கைக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

இந்த நிலையில் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக பேசி இருந்த கேப்டன் பால் ஸ்டெர்லிங் “இந்திய அணிக்கு எதிரான எந்த ஒரு வெற்றியும் மிகப்பெரியதான ஒன்று. அவர்களின் அணி இப்பொழுது சற்று அனுபவத்தில் பின்தங்கி இருப்பது எங்களுக்கு தெரியும். ஆனால் அனுபவமற்ற அணியைப் பற்றிய எனது தனிப்பட்ட அனுபவம் என்னவென்றால், அவர்கள் மிகவும் பசியுடன் இருப்பார்கள். அவர்களுக்கு தங்களை நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அவர்கள் இந்திய அணியில் இடம் பெறுவதற்காக போராடுவார்கள்.

விளையாட்டின் தரம் அல்லது எதிரணியின் தரம் பற்றி எந்தவித சந்தேகமும் கிடையாது. இவையெல்லாம் எவ்வளவு தரத்தில் இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். அவர்கள் தரப்பில் சில பெரிய பெயர்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் தாண்டி நாங்கள் மாற்றி அமைத்து வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்!” என்று கூறியிருந்தார்!

- Advertisement -

இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் தோற்று தொடரை இழந்த பின்பு பேசிய அவர் “எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. நாங்கள் அவற்றை சரியாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆட்டத்தில் 40 ஓவர்களிலும் எங்களுக்கு நேர்மறையான விஷயங்கள் இருந்தன. கடைசி சில ஓவர்களில்தான் நாங்கள் அவர்களிடம் ஆட்டத்தை இழந்து விட்டோம். அவர்களுடைய பேட்ஸ்மேன் அட்டாக் செய்ய சென்ற பொழுது எங்களால் பந்து வீச முடியவில்லை. எங்களிடம் சரி செய்ய வேண்டிய பக்கங்கள் இருக்கிறது. அதை சரி செய்து திரும்பி வந்து மூன்றாவது போட்டியில் வெற்றி பெறுவோம்!” என்று கூறி இருக்கிறார்!

நடந்து முடிந்திருக்கும் இரண்டு போட்டிகளிலும் அயர்லாந்து அணியின் கேப்டன் அனுபவ வீரருமான பால் ஸ்டெர்லிங் இதுவரை தன் திறமைக்கு தகுந்த அளவுக்கு விளையாடவில்லை. அதிரடியாக விளையாடக்கூடிய அவரது பாணி இந்திய அணிக்கு எதிராக பலிக்கவில்லை. அவர் பேட்டிங்கில் நிச்சயம் மேல் வரிசையில் திரும்பி வரும் பொழுது, அது அயர்லாந்து அணியின் மொத்த பேட்டிங் யூனிட்டுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையாக அமையும். எனவே நியூசிலாந்து அணியின் வெற்றி அவர் செயல்படுவதில்தான் இருக்கிறது!