“அடுத்த டெஸ்டில் நிச்சயமாக நாங்கள் இந்திய அணியை வீழ்த்துவோம்” – அலைஸ்டர் குக் நம்பிக்கை

0
249
Cook

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் யாரும் எதிர்பார்த்ததை விட அதிகபட்ச சுவாரசியத்தை எட்டி இருக்கிறது.

இங்கிலாந்து அணி பாஸ் பால் முறையில் அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகி வருகின்ற காரணத்தினால், சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய மண்ணில் வெற்றி பெறுவது கடினம் என்று கணிக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இந்த கணிப்பை பொய்யாக்கி முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அருமையான வெற்றியை பெற்றது. இங்கிலாந்தின் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவர்களுக்கு மிகச்சிறந்த வெற்றியாக இது பதிவாகியது.

இதன் காரணமாக இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. அதே சமயத்தில் இந்திய அணியில் முக்கியமான நான்கு அனுபவ வீரர்கள் இல்லாமல் இந்திய அணி போட்டியில் களம் இறங்க வேண்டி இருந்தது.

- Advertisement -

இப்படியான காரணத்தினால் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு நிறைய எதிர்பார்ப்புகள் நிலவியது. இங்கிலாந்து அணி மீண்டும் இந்திய அணியை வீழ்த்தலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை இப்படியான கணிப்புகளை பொய்யாக்கி இந்திய அணி இளம் வீரர்களை வைத்து வென்று அசத்தியிருக்கிறது. தொடரும் சமநிலையை எட்டி இருக்கிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அலைஸ்டர் கூறும் பொழுது ” தற்பொழுது இந்தியா எல்லோரையும் விட நிம்மதியாக இருக்கும். அவர்கள் முதல் டெஸ்ட் தோல்விக்கு பிறகு மிகவும் குழப்பமாக இருந்தார்கள்.

இங்கிலாந்து போட்டியை தோற்றது. ஏனென்றால் அவர்கள் பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட மேட்ச் வின்னிங் பேட்டிங் செய்யவில்லை. இதை இங்கிலாந்து அணி உணர்வார்கள். 30 முதல் 70 ரன்கள் எடுப்பதால் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல முடியாது. இங்கிலாந்தில் யாரும் சதம் அடிக்காத காரணத்தினால் போட்டியை தோற்றது அவர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும்.

இதையும் படிங்க : “மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி வருவாரா? மாட்டாரா?” – ராகுல் டிராவிட் பதில்

இந்த போட்டியில் இருந்து இங்கிலாந்து நிச்சயம் தேவையான சில விஷயங்களை எடுக்கும். எனவே ராஜ்கோட்டில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி வெல்லும்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -