கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“இந்தியாவை செமி பைனலில் தோற்கடிப்போம்.. 2017 ஞாபகம் இருக்கா?” – பாகிஸ்தான் இமாத் வாசிம் அதிரடி சவால்!

நாளை உலகக்கோப்பை தொடரில் மிகவும் முக்கியமான இரண்டு போட்டிகள் நடக்க இருக்கிறது. பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் ஒரு போட்டியும், ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் இன்னொரு போட்டியும் நடக்க இருக்கிறது.

- Advertisement -

இதில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கான முக்கியத்துவம் குறைவுதான். இங்கிலாந்து அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறிவிட்டது. இங்கிலாந்தை வென்றால் ஆஸ்திரேலிய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பலமாகும்.

அதே சமயத்தில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்ற போட்டி ஏறக்குறைய காலிறுதி போட்டி போன்றது. அரையிறுதி வாய்ப்பில் நான்காவது இடத்திற்கான போட்டியில் இந்த இரு அணிகளும் இருக்கின்றன.

எனவே நாளை இந்த போட்டியில் யார் தோற்றாலும் அவர்களுக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது அந்த இடத்திலேயே முடிந்து விடும். குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு முடிந்து விடும். நியூசிலாந்து அணிக்கு ஒரு சிறு வாய்ப்பு மட்டும் இருக்கும்.

- Advertisement -

எனவே பங்களாதேச அணிக்கு எதிராக கடந்த போட்டியில் 32 ஓவர்களில் இலக்கை விரட்டி பெரிய வெற்றி பெற்ற பாகிஸ்தான் மனரீதியாக நம்பிக்கையாக இருக்கிறது. எனவே நியூசிலாந்து அணியை வெல்ல முடியும் என்று நம்புகிறது.

இன்னொரு பக்கத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தால் விளையாட முடியாமல் இருக்கிறார். இந்த நேரத்தில் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்றி உலகக் கோப்பை தொடரில் இருந்து காயத்தால் வெளியேறி இருக்கிறார்.

தற்போது உலகக்கோப்பை பாகிஸ்தான் அணியில் இடம்பெறாத சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் இது குறித்து கூறும் பொழுது ” இந்த உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் அணியால் தோற்கடிக்க முடியும். 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலில் இந்தியாவிடம் தோற்று விட்டு, இறுதிப் போட்டியில் அவர்களை வீழ்த்தி நாங்கள் கோப்பையை வென்றோம். இந்த முறையும் எங்களால் அப்படி செய்ய முடியும்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -
Published by
Tags: Odi wc 2023

Recent Posts