சர்வதேச டி20 அணியிலிருந்து விராட் கோலியை நீக்கியது எப்படி? இதுதான் நடந்திருக்க வேண்டும்! – ஹர்பஜன் சிங் விளக்கம்!

0
13559

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலியை இப்படித்தான் தேர்வுக்குழுவினர் நீக்கி இருக்கவேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

தற்போது சர்வதேச டி20 அணியிலிருந்து இந்தியாவின் சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா போன்றோர் முற்றிலுமாக நீக்கப்பட்டு அந்த திட்டத்திலேயே இல்லை என்கிற அளவிற்கு பேசப்பட்டு வருகின்றனர். குறிப்பாக விராட் கோலி நீக்கம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஒரு மாத ஓய்வுக்கு பிறகு ஆசிய கோப்பைக்கு வந்து விளையாடிய விராட் கோலி ஆசிய கோப்பை தொடர், டி20 உலக கோப்பை தொடர் மற்றும் நடுவில் இரண்டு இருதரப்பு தொடர் என 12 போட்டிகளில் 700+ ரன்கள் குவித்திருக்கிறார்.

ஆசியகோப்பைக்கு பிறகு , சர்வதேச டி20 போட்டிகளில் இவரது சராசரி 70 ஆகும். இதில் ஏழு அரைசதம் மற்றும் ஒரு சதம் விலாசி இருக்கிறார். குறிப்பாக ஆசிய கோப்பை தொடரில் 276 ரன்கள் குவித்தது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. இந்திய வீரர்கள் மத்தியில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆக இருக்கிறது.

டி20 உலக கோப்பை தொடரில் 292 ரன்கள் குவித்து அதிகபட்ச கோரை பதிவு செய்தார். இதில் நான்கு அரைசதங்கள் அடங்கும். இப்படி மிகச் சிறந்த பார்மில் இருந்த விராட் கோலியை எதற்காக தேர்வு குழுவினர் சர்வதேச டி20 திட்டத்திலிருந்து நீக்கினார்? என்று கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் ஹர்பஜன் சிங்.

- Advertisement -

“பிசிசிஐ நிர்வாகம் மற்றும் தேர்வுக்குழுவினர் எதிர்பார்த்த ரிசல்ட் அவர்களுக்கு டி20 உலக கோப்பையில் கிடைக்கவில்லை. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும். அந்த நேரத்தில் அணியின் சீனியர் வீரர்கள் மீது இந்த பொறுப்பு செல்லும். அவர்கள் நன்றாகவே விளையாடி இருந்தாலும் இறுதியில் அணி தோல்வி அடைந்ததற்கு அனைத்து பொறுப்பும் அவர்கள் தானே ஏற்கவேண்டும்.

இந்த நேரத்தில் இளம் வீரர்களை குறை சொல்ல முடியாது. பொறுப்பு முழுவதும் சீனியர் வீரர்கள் தலையில் இருக்கிறது. அதன் அடிப்படையில் பிசிசிஐ சீனியர் வீரர்களை திட்டத்தில் இருந்து நீக்கி எதிர்காலத்திற்கு ஏற்றவாறு இளம் வீரர்களை அணியில் சேர்த்து இருக்கிறது. இப்படித்தான் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றோர் நீக்கப்பட்டிருக்க முடியும். ஏனெனில் பிசிசிஐ தேர்வு குழுவினருக்கும் அணி கோப்பையை வெல்லவில்லை என்கிற அழுத்தம் இருக்கும். அதன் அடிப்படையில் அவர்களும் சீனியர் வீரர்கள் மீது அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். அணியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.” என்றார்.

மேலும் பேசிய அவர், “இதை பிசிசிஐ அணி நிர்வாகம் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களிடம் தெளிவுபடுத்திவிட்டு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். அதை செய்ய தவறியதும் ரசிகர்களின் கொந்தளிப்பிற்கு காரணமாக இருக்கிறது. உரிய மரியாதையை சீனியர் வீரர்களுக்கு இனியாவது கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.