“நிறைய ரன் அடிச்சு இந்தியா மேல பிரஷர் போட நினைச்சோம்.. ஆனா கடைசியில..!” – ஆப்கான் கேப்டன் வேதனை!

0
1468
Rohit

நடப்பு உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி சில முக்கிய அணிகளுக்கு ஆபத்தை உருவாக்கக்கூடிய அணியாக கணிக்கப்பட்டு இருந்தது.

உலகக் கோப்பைக்கு முன்பாக அவர்கள் பங்களாதேஷில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்று இருந்தார்கள். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு பங்களாதேஷில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது இங்கிலாந்துக்கு அடுத்து ஆப்கானிஸ்தான்தான். இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் வரை அங்கு தோற்று இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் உலகக்கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, யாரும் எதிர்பார்க்காத வகையில் 200 ரன்களை கூட எட்டாமல் சுருண்டு தோற்றது.

இந்த நிலையில் இன்று இந்திய அணிக்கு எதிராக டெல்லி மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணி தனது இரண்டாவது போட்டியில் மோதியது. இந்த போட்டியில் 300 ரன்கள் எடுப்பதற்கான அடித்தளத்தை உருவாக்கிய ஆப்கானிஸ்தான் அணி இறுதியில் 272 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த ஏமாற்றம் ஒருபுறம் இருக்க, இந்திய அணியை 35 ஓவர்களில் இலக்கை எட்ட விட்டு ரன் ரேட்டில் மிகப்பெரிய அடியை மீண்டும் வாங்கி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்று இருக்கிறது. இரு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி எதிர் பார்த்த அளவிற்கு விளையாடவில்லை.

- Advertisement -

தோல்விக்குப்பின் பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸமத்துல்லா ஷாகிதி கூறும்பொழுது
“இந்தியாவின் பேட்டிங் வரிசை மிக நீண்டது. எனவே நாங்கள் குறைந்தபட்சம் 300 ரன்கள் ஆவது எடுப்பதற்கு திட்டமிட்டு இருந்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக நாங்கள் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். இந்த விக்கெட் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்தது.

நாங்கள் அதிக ரன் எடுத்து இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க விரும்பினோம். ஆனால் இந்தியா அடுத்தடுத்த விக்கெட்டுகளை கடைசி நேரத்தில் வீழ்த்தியது எங்களால் அதிக ரன்கள் எடுக்க முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணம்.

நாங்கள் ஆரம்பத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்த பொழுது ஓமர்ஸாய் இடம் டாட் பந்துகள் பற்றி கவலைப்பட வேண்டாம் நாம் முதலில் பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவோம் என்று கூறினேன்.

இன்னும் எங்களிடம் ஏழு போட்டிகள் இருக்கிறது. அந்த ஆட்டங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, அடுத்து வரும் போட்டிகளில் செயல்படுவோம்!” என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்!