நான் எவ்வளவோ சிறந்த ஆட்டங்களைப் பார்த்து இருக்கிறேன், ஆனால் இது வேற மாதிரியான ஆட்டம் – ராஜட் பட்டிதர் குறித்துப் பேசியுள்ள விராட் கோலி

0
183

நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின. போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ராஜட் பட்டிதர் 54 பந்துகளில் 112 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 193 ரன்கள் மட்டுமே குவித்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 58 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி கண்டு இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு முன்னேறியுள்ளது. போட்டியில் தோல்வி அடைந்த லக்னோ அணி தொடரில் இருந்து வெளியேறியது.

- Advertisement -

ராஜட் பட்டிதரை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி

நான் நிறைய போட்டிகளில் நிறைய முறை நெருக்கடியான கட்டத்தில் இருந்திருக்கிறேன். இன்றைய நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக விளையாடிய வீரர்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று லக்னோ அணிக்கு எதிராக ஒரு அன் கேப்டு இளம் வீரர் இவ்வாறு விளையாடுவதை பார்க்கையில் மிகப் பெருமையாக இருக்கிறது. நான் பார்த்ததிலேயே மிக சிறந்த ஆட்டம் என்று விராட் கோலி ராஜட் பட்டிதரை புகழ்ந்து பாராட்டி இருக்கிறார்.

மேலும் பேசிய அவர் இதை சாதாரணமான இன்னிங்ஸ் இன்று நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது இதை நாம் கொண்டாட வேண்டும். மேலும் ஒரு கிரிக்கெட் வீரராக இதுபோன்ற சிறந்த இன்னிங்சை நாம் எப்பொழுதும் மனதார பாராட்ட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- Advertisement -

நேற்று மேலும் பேசிய அவர் ஒரு கட்டத்தில் கேஎல் ராகுல் மற்றும் தீபக் ஹூடா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடியது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. வனிண்டு ஹசரங்கா இடையில் மிக சாமர்த்தியமாக செயல்பட்டு விக்கெட்டை வீழ்த்தினார். அதேபோல ஜோஷ் ஹேசில்வுட் கடைசி நேரத்தில் இரண்டு ஓவர்கள் சிறப்பாக வீசினார். அடுத்த போட்டிக்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது.

அடுத்து மீதமிருக்கும் இரண்டு போட்டியிலும் மிக சிறப்பாக விளையாட வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமே தற்போது உள்ளது என்றும் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற பின்னர், நாம் கொண்டாடலாம் என்று புன்னகைத்து பேசியிருக்கிறார்.