கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“எங்கள ரொம்ப குறைவா இங்கிலாந்து எடை போட்டுட்டாங்க.. அதுக்கான ரிசல்ட்தான் இது!” – தீக்சனா அதிரடி ஸ்டேட்மென்ட்!

நேற்று இலங்கை அணி பெங்களூர் மைதானத்தில் வைத்து இங்கிலாந்து அணிக்கு மறக்க முடியாத மோசமான நினைவை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

இலங்கை இங்கிலாந்து அணியை வென்றது பெரிய அதிர்ச்சி அடையக்கூடிய விஷயம் இல்லைதான் என்றாலும் கூட, நேற்று இலங்கை அணி மூன்று துறைகளிலும் செயல்பட்ட விதம் என்பது, உலகத் தரத்தில் இருந்தது.

இங்கிலாந்து அணியை எந்த விதத்திலும் நிமிர விடவே கூடாது என்ற நோக்கத்தில் வந்தது போல, இலங்கையின் ஒட்டுமொத்த வீரர்களும் மிகச்சிறப்பான செயல்பாட்டை பவுலிங், பீல்டிங், பேட்டிங் என வெளிப்படுத்தினார்கள்.

இங்கிலாந்து அணியால் ஆட்டத்தில் எந்த இடத்திலும் எழுந்து வந்து இலங்கை அணிக்கு அழுத்தத்தை உருவாக்கவே முடியவில்லை. இலங்கை அணியின் வீரர்கள் அழுத்தம் உருவாவதற்கான முதல் புள்ளி உருவாகும் போதே அதற்கான பதிலடி கொடுத்தார்கள்.

- Advertisement -

நேற்று இலங்கை அணியிடம் இங்கிலாந்து அணி ஒட்டுமொத்தமாக சரணடைந்து தோற்றது என்பது தான் உண்மை. மேலும் இங்கிலாந்தின் இந்த தோல்வியால் அவர்கள் ஏறக்குறைய அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்டார்கள்.

போட்டி குறித்து பேசி உள்ள இலங்கை அணியின் வீரர் தீக்ஷனா கூறும்பொழுது “நாங்கள் மூன்று ஆட்டங்களில் தோல்வி அடைந்து நெதர்லாந்து அணிக்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்ற காரணத்தினால் இங்கிலாந்து அணி எங்களை குறைவாக மதிப்பிட்டு விட்டது. அவர்கள் இப்படி மதிப்பிட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

இதனால்தான் நாங்கள் எங்களுடைய பலத்தை நம்பி விளையாடியதால் எங்களுக்கு வெற்றி கிடைத்தது. நாங்கள் ஒரு எளிய திட்டத்துடன்தான் போட்டிக்கு சென்றோம். அதனால்தான் இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றோம்.

அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் அணியில் இணைந்தது, ஒட்டுமொத்தமாக எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியான விஷயமாக இருக்கிறது. அவர் இந்தியாவில் நிறைய விளையாடி இருக்கிறார். அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள விஷயங்கள் இருக்கிறது. பந்து வீச்சின் போது அவரிடமிருந்து நாங்கள் நிறைய உதவிகள் பெற்றோம். அவர் அணியில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -
Published by