முடிக்கப்பட வேண்டிய வேலை ஒன்று மிச்சம் உள்ளது ; போட்டி முடிந்த பிறகு பெங்களூர் ரசிகர்களுக்கு ஏபி டிவில்லியர்ஸ் வெளியிட்ட செய்தி

0
237
Ab de Villiers RCB

நேற்று நடந்து முடிந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 ஆவது முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டுள்ளது.

முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கொல்கத்தா அணியை பந்து வீச அழைத்தார். ஆட்டம் ஆரம்பித்ததும் கோலி மற்றும் படிக்கல் நிதானமாக விளையாட தொடங்கினர். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த படிக்கல் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அதற்கு அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் மிகப்பெரிய ரன்கள் குவிக்காமல் ஏமாற்றினார்கள்.

- Advertisement -

பெரிதும் நம்பிக்கையுடன் பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 15 ரன்னிலும் டிவில்லியர்ஸ் 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். விராட் கோலி மட்டுமே அணியில் அதிகபட்சமாக 39 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக இறுதியில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே குவித்தது.

சுனில் நரைன் ஆட்டத்தால் வெற்றியைக் கண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய சுனில் நரேன் பிற்பாதியில் வந்து பேட்டிங்கிலும் 15 பந்துகளில் 3 சிக்சர்கள் குவித்து வெற்றியை தனது அணியின் பக்கம் திருப்பினார். கொல்கத்தா அணியில் ஓபனிங் வீரர்கள் கில் மற்றும் ஐயர் அற்புதமான துவக்கம் கொடுக்க, பின்னர் வந்து விளையாடிய ராணா மற்றும் சுனில் நரைன் ஜோடி கொல்கத்தா அணியை வெற்றிக்கு பக்கத்தில் அழைத்துச்சென்றனர். இறுதியில் கேப்டன் மோர்கன் மற்றும் ஷகிலா சன் வெற்றிகளை குவித்து கொல்கத்தா அணியை இறுதியில் வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

அடுத்த ஆண்டு கூடுதல் வலிமையுடன் களம் இறங்குவோம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றில் விளையாடினாலே அந்த அணியில் அதிக நம்பிக்கையுடன் பார்க்கப்படும் ஒரு வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தான். ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றில் மட்டும் பெங்களூர் அணைக்காக ஏபி டிவில்லியர்ஸ் 257 ரன்கள் குவித்துள்ளார். மேலும் அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 44.4 ஆகும். இதுமட்டுமின்றி பிளே ஆஃப் சுற்றில் இரண்டு முறை ஆட்டநாயகன் விருதையும் பெங்களூர் அணிக்காக ஏபி டிவிலியர்ஸ் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நேற்றைய போட்டியில் அவர் வெறும் 11 ரன்களில் ஆட்டமிழந்தது அந்த அணி ரசிகர்கள் அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. போட்டி முடிந்ததும் ஏபி டிவிலியர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்கள் அனைவருக்கும் நம்பிக்கையான செய்தியைக் கூறி இருக்கிறார்.”எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து அனைத்து ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்னும் எங்களுக்கு முடிக்கப்படாத வேலை ஒன்று உள்ளது. அந்த வேலை முடியும் வரை எங்களுக்கு ஓய்வு கிடையாது என்றும், அடுத்த வருடம் கூடுதல் வலிமையுடன் உங்களுக்காக நாங்கள் களமிறங்கி விளையாடுவோம்” என்று நம்பிக்கையுடன் ஏபி டிவில்லியர்ஸ் பெங்களூரு ரசிகர்களிடம் கூறியுள்ளார்.

- Advertisement -