“எங்களுக்கு ஐபிஎல் இருக்கு.. எந்த கவலையும் கிடையாது!” – சூரியகுமார் யாதவ் அதிரடியான பேச்சு!

0
644
Surya

அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கு பெறுகின்றன. கடந்த முறைகள் போல் இல்லாமல், இந்த முறை அணிகள் அதிகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும் இரண்டு சுற்றுப் போட்டிகளை தாண்டினால் மட்டுமே அரையிறுதியை எட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டி20 உலகக்கோப்பை முன்பாக தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்தது. தற்போது அடுத்த டி20 உலகக்கோப்பையில் விளையாடும் அனைத்து அணிகளும் இப்பொழுதே தகுதிச்சுற்று நடத்தப்பட்டு கண்டறியப்பட்டு இருக்கின்றன.

- Advertisement -

இதன் காரணமாக 20 அணிகளுமே டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து, அதற்கு தயாராகும் விதமாக தங்களின் திட்டங்களை வகுத்து அதன்படி செயல்பட ஆரம்பித்து விட்டன.

இந்திய அணியை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை உலகக் கோப்பை தொடரை முடித்துக் கொண்டு, தற்பொழுது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடுகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை, உள்நாட்டில் ஜனவரி மாதத்தில் விளையாடுகிறது.

டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு 6 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே இருக்கிறது. எனவே டி20 உலகக்கோப்பை இந்திய அணியைக் கண்டறியவும், கட்டமைக்கவும் எஞ்சி உள்ள 6 டி20 சர்வதேச போட்டிகளே போதுமா? என்கின்ற கேள்வியும் இருக்கிறது.

- Advertisement -

இது மட்டுமல்லாமல் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவார்களா? என்பது ஒருபுறம் சந்தேகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அவர்கள் வராவிட்டால் யார் விளையாடுவார்கள்? அப்படி விளையாடக் கூடியவர்களுக்கு யார் மாற்று வீரர்களாக இருப்பார்கள்? என்பதும் பெரிய கேள்வி. மேலும் இந்த இரண்டு தரப்பு வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கத் தேவையான அளவில் போட்டிகளும் இல்லை.

இந்த நிலையில் நாளை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்கு பத்திரிகையாளர்களை சந்தித்த கேப்டன் சூரியகுமார் யாதவிடம், டி20 உலகக்கோப்பைக்கு முன்பாகக் குறைந்த டி20 போட்டிகள் மட்டுமே இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்து பேசிய சூரியகுமார் யாதவ் கூறும்போது “ஆமாம் எங்களிடம் குறைந்த சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே இருக்கிறது. ஆனால் எங்களிடம் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இருக்கிறது. எங்கள் வீரர்கள் ஐபிஎல் தொடரில் குறைந்தபட்சம் 14 போட்டிகள் விளையாடுவார்கள். மேலும் அவர்களுக்கு நிறைய விளையாடிய அனுபவம் இருக்கிறது. இதனால் இந்த விஷயம் சிக்கலாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

எங்கள் அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும் அவர்களுடைய பங்கு என்னவென்று மிக நன்றாக தெரியும். அவர்களின் பொறுப்புகள் மற்றும் வெவ்வேறு சூழ்நிலைகளில் எவ்வாறு விளையாடுவார்கள் என்பது குறித்தும் நன்றாகவே தெரியும்!” என்று கூறியிருக்கிறார்!