“கோலி ரோகித்த தூக்க எங்ககிட்ட ப்ளான் இருக்கு” – நேபாள் கேப்டன் இந்திய போட்டிக்கு முன்பாக பேட்டி!

0
1008
Rohit

தற்பொழுது 16ஆவது ஆசியக் கோப்பை தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய பாகிஸ்தான் போட்டி மழையால் கைவிடப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய ஏமாற்றத்தை உண்டாக்கி இருக்கிறது!

இந்த நிலையில் நாளை இந்திய அணி நேபாள் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இரண்டு அணிகளுக்கும் முதல் சுற்றின் கடைசிப் போட்டி, நாளை நடைபெறுகிற போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே முதல் சுற்றின் முதல் போட்டியில் நேபாள் அணியை எதிர்கொண்டு வென்று, பாகிஸ்தான் அணி இரண்டாவது சுற்று தகுதி பெற்றிருக்கிறது.

- Advertisement -

நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங் செய்ததில் பல அம்சங்களை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் கண்டுபிடித்திருக்கும். அதில் கவலைக்குரிய விஷயமாக இந்தியா பேட்ஸ்மேன்கள் இடது கை ரேகப்பந்துவீச்சாளருக்கு தடுமாறுவது இருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் இந்திய ஒருநாள் கிரிக்கெட்டின் புதிய துவக்க வீரர் சுப்மன் கில் கடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முதல் பேட்டிங்கில் மிகவும் தடுமாறி வருவது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அந்த சுற்றுப்பயணத்திற்கு முன்பாக மிகச்சிறந்த ஐபிஎல் சீசனை கில் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வருடமாக காயத்தில் இருந்து அணிக்கு திரும்பி வந்துள்ள நான்காவது இடத்தில் பேட்டிங் செய்யும் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை நல்ல முறையில் தொடங்கினாலும் கூட, அவருடைய பலவீனமான ஷார்ட் பந்தில் ஆட்டமிழந்தது கவலை அளிப்பதாக இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் நாளை நேபாள் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கும் போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. மழை எவ்வளவு நேரம் இடம் தருமோ, அவ்வளவு நேரம் இந்தியா பேட்டிங் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்திய முன் வரிசை பேட்ஸ்மேன்கள் பயிற்சியாக விளையாட வேண்டிய தேவை இருக்கிறது.

இந்த நிலையில் நாளைய போட்டி குறித்து பேசி உள்ள நேபாள் அணியின் கேப்டன் “நாங்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வருகிறோம். அவர்கள் சூப்பர் ஸ்டார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால் அவர்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்து எங்களிடம் சில திட்டங்கள் இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்.

நாளைய போட்டி முழுவதுமாக நடந்து எந்த அணி வெல்கிறதோ அந்த அணி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறும். ஒருவேளை நாளைய போட்டி நடைபெறாவிட்டால் இந்திய அணி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறும். ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியில் நேபாள் அணி தோல்வி அடைந்தும், இந்திய அணி விளையாடிய போட்டி டிரா ஆகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!