“நாங்க சிக்க விரும்பல.. நானும் சூர்யாவும் இதைத்தான் பேசிட்டே இருந்தோம்!” – கேப்டன் கேஎல்.ராகுல் பேட்டி!

0
12565
Rahul

இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக, முக்கிய வீரர்கள் ஓய்வில் இருக்கும் பொழுது, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான ஒரு வெற்றியை, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பெற்றிருக்கிறது!

இந்த போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 276 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முகமது சமி ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் மற்றும் கில் இருவரும் 142 ரன்கள் முதல் விக்கெட்டுக்கு தந்தார்கள்.

இதற்கு அடுத்து இந்திய அணி திடீரென 185 ரன்கள் விக்கெட்டுகள் என்று சிறிதாக நெருக்கடிக்கு வந்தது. இந்த நேரத்தில் கே.எல்.ராகுல் உடன் ஜோடி சேர்ந்த சூரியகுமார் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இதனால் வெற்றி எளிதானது. கே.எல்.ராகுலும் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி 80 ரன்கள் குவித்தது.

வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் கே.எல்.ராகுல் “கேப்டன் பதவி என்பது, இது எனக்கு முதல் முறை நடப்பது கிடையாது. இதற்கு நான் பழகி விட்டேன். நான் அதை விரும்புகிறேன். கொழும்புவிற்கு பிறகு இங்கு ஆரம்பத்தில் சொர்க்கமாக இருந்தது. ஆனால் உண்மையில் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருந்தது. இது கடினமானது. உடல் ரீதியாக சவால் ஆனது.

- Advertisement -

ஆனால் நாங்கள் அனைவரும் உடற் தகுதியில் வேலை செய்திருக்கிறோம். அது களத்தில் வெளிப்படுகிறது. நாங்கள் ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே கொண்டு விளையாட திட்டமிட்டோம். எனவே அவர்கள் 10 ஓவர்கள் வீச வேண்டி இருந்தது.

சுப்மன் கில் செட் பேட்டர் ஆட்டம் இழந்த பொழுது ஆட்டம் கொஞ்சம் சிக்கலானது. ஆனால் சூர்யாவுடன் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடிந்தது. இது போன்ற சவாலான சூழ்நிலையில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

நாங்கள் இருவரும் நல்ல கிரிக்கெட் ஷாட்களை அடிப்பது மற்றும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது என பேசிக்கொண்டே இருந்தோம். எங்கள் பேட்டர்கள் அனைவரும் வேலை செய்கிறார்கள். நாங்கள் எதிலும் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. அதனால் எப்பொழுதும் ஒரு சமநிலையில் இருக்கவே விரும்புகிறோம். எனவே நாங்கள் ஆழமாக எடுத்துச் சென்றோம்!” என்று கூறியிருக்கிறார்!