இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பென் டக்கட் விக்கெட்டை வீழ்த்திவிட்டு முஹம்மது சிராஜ் ஆக்ரோஷமாக செயல்பட்டார். வேண்டுமென்றே சிராஜை மோதி விட்டு சென்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் சிராஜ் இந்த போட்டி முழுவதுமே இங்கிலாந்து வீரர்களை குறி வைத்து வாய் மோதலில் ஈடுபட்டார். இதை அடுத்து சிராஜுக்கு ஐசிசி 15 சதவீதம் போட்டி ஊதியத்தில் இருந்து அபாரதம் விதித்திருக்கிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் களத்தில் வீரர்கள் ரோபோ போல் நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இங்கிலாந்து வீரர்கள் மீது தவறு:
இது குறித்து பேசிய அவர், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நடந்த முக்கிய ஹைலைட்டை குறிவைத்து இந்திய வீரர்கள் மோதலில் ஈடுபட்டது தான் இரண்டாவது இன்னிங்ஸ் போது 90 வினாடிகளுக்கு முன் போட்டி தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் வேண்டும் என்று தாமதம் செய்தார்கள்.
இதனால் இந்திய வீரர்கள் கோபப்பட்டதில் நியாயம் இருக்கின்றது. இதன் காரணமாக அணியில் இருந்த ஒவ்வொரு வீரர்களும் கடுப்பாக இருந்தார்கள். இதனால் கோபப்பட்ட சிராஜ், விக்கெட்டை வீழ்த்தியவுடன் ஆக்ரோஷத்தில் கத்தினார்.
ரோபோக்கள் விளையாடனுமா?
சிராஜ் போன்ற ஒரு வீரர் உங்கள் அணியில் இருக்க வேண்டும் என ஒவ்வொரு ரசிகர்களும் எதிர்பார்ப்பார்கள்.இந்த விஷயத்திற்காக சிராஜ்க்கு ஐசிசி அபராதம் பிடித்திருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முகத்திற்கு நேராக அவர் கத்தினாரே தவிர அவர் டக்கட் மீது மோதவில்லை.
இதையும் படிங்க: சுப்மன் கில் திட்டியது மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரிஞ்சுதா? அதுக்கு அப்புறம் என்ன நடந்தது தெரியுமா? சஞ்சய் மஞ்சுரேக்கர் பேச்சு
இன்னும் சொல்லப்போனால் டக்கட் தான் சிராஜ் இருந்த திசை நோக்கி வந்து மோதினார். எனினும் இது போன்ற நெருக்கடியான போட்டிகளில் வீரர்களின் ஆக்ரோஷம் வெளிப்படும். இதை ரசிகர்களும் விரும்புகிறார்கள். அப்படி இருக்கும் போது வெறும் 22 ரோபோக்கள் விளையாட வேண்டும் என ஐசிசி எதிர்பார்க்கிறதா என்று நாசர் உசேன் கேள்வி எழுப்பி உள்ளார்.






