இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்து வீரர்களை கடுமையாக சாடிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் பலரும் கில்லை ஆக்ரோஷமான இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
ஆனால் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்லை, இங்கிலாந்து அணி வீரர்கள் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் குற்றம் சாட்டுகிறார். இது தொடர்பாக பேசிய அவர், “இது போல் ஒரு சண்டை, விராட் கோலி இருந்த போது நிகழ்ந்தால் பிரச்சனை இன்னும் கையை மீறி சென்றிருக்கும்.”
ஏமாற்றமாக இருந்தது:
“அது மட்டுமில்லாமல் அந்த மோதல் விராட் கோலியை ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆக மாற்றி இருக்கும். ஆனால் கில் விசயத்தில், எனக்கு அதுதான் மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அவர் களத்தில் கோபப்பட்ட பின் பேட்டிங்கில சரியாக விளையாடவில்லை.”
“இதன் மூலம் அவர் களத்தில் கோபப்பட்டது சரியான ஒரு தாக்கத்தை அவருக்கு ஏற்படுத்தவில்லையோ என்று எனக்கு தோன்றுகிறது. இது அவருடைய பேட்டிங்கை பாதித்திருக்கலாம். அது மட்டும் இல்லாமல் கில், பேட்டிங்கில் ரன் குவிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் வந்தார்.”
கில்லின் பேட்டிங் பாதிப்பு:
“ஆனால் இங்கிலாந்து வீரர்கள் அவரை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியது ஸ்டெம்ப் மைக்கில் பதிவானது. இது சுப்மன் கில்லுக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்திருக்கும். ஏனென்றால் தற்போதைய சூழ்நிலையில் இந்திய அணி வீரர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அங்கு உள்ள வீரர்கள் நல்ல வரவேற்ப்பை கொடுத்திருந்தார்கள்.”
இதையும் படிங்க: ஸ்டோக்ஸ் இந்திய அணிக்கு செஞ்ச அந்த விஷயம்.. 3வது டெஸ்ட் தோல்வியடைய அதான் முக்கிய காரணம் – இங்கி முன்னாள் கேப்டன்
“இது தற்போது கில்லுக்கு ஒரு புதிய விஷயமாக அமைந்திருக்கும். இதனால் அவர் கொஞ்சம் பதற்றம் அடைந்து இருப்பார். இந்த மோதலை அவர் சரியாக கையாளவில்லை என்று நினைக்கின்றேன். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் நன்றாக பேட்டிங் செய்தார். சில நல்ல பந்துகளை அவர் அபாரமாக கையாண்டார். ஆனால் மூன்றாவது டெஸ்டில் திடீரென்று கில், பந்துகளை மிஸ் செய்ய ஆரம்பித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 9 பந்துகள் இடைவெளியில் அவர் சரியாக பேட்டிங் செய்யவில்லையோ என்று தோன்றியது” என சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார்.






