“இந்தியாவை வீழ்த்த நாங்கள் தயார்” – இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த அயர்லாந்து வீரர்.!

0
981

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தற்போது அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கு இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார் .

காயம் காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த அவர் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடல் தகுதியை நிரூபித்து ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பைக்கு முன்பாக அயர்லாந்து தொடரில் இந்திய அணியை வழி நடத்துகிறார் . மேலும் காயம் காரணமாக ஓய்வில் இருந்த இந்திய வீரர் பிரதீஸ் கிருஷ்ணாவும் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறார் ..

- Advertisement -

ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் மற்றும் பிரதீஷ் கிருஷ்ணா ஆகியோரின் உடற்தகுதியும் அவர்களது பந்துவீச்சு திறனும் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் இந்த தொடரில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை பார்ப்பதற்கும் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் அயர்லாந்து வீரர் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அயர்லாந்து அணையின் இளம் சுழற்பந்து வீச்சாளரான பென் ஒயிட் தங்களது நாட்டில் நடைபெறும் டி20 தொடரில் இந்திய அணியை வீழ்த்துவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் அயர்லாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் 18 டி20 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பத்திரிக்கையாளர்களுக்கு இவர் அளித்த பேட்டியில் அயர்லாந்து அணி இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

இது குறித்து பிபிசி செய்தி சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் அவர் ” இந்தியா வலிமையான அணி என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் எங்களுடைய நாளில் எங்களால் எந்த ஒரு அணியையும் எளிதாக வீழ்த்த முடியும் . கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என்று யாரும் கணிக்க முடியாது. நாம் வெற்றி பெற வேண்டும் என்று நம்பிக்கை வைப்பது தான் முக்கியமான விஷயம் . எங்கள் நாட்டில் வைத்து இந்தியாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்திய அணிக்கு எதிராக நான் தற்காப்பு விதமாக பந்து வீசப் போவதில்லை விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தாக்குதல் பாணியில் பந்து வீச இருக்கிறேன் . இந்திய அணியில் பல சிறந்த வீரர்கள் இருந்தாலும் என்னுடைய இலக்கு சஞ்சு சாம்சன் டிக்கெட்டை வீழ்த்துவதுதான்” என்று தெரிவித்தார். இதனைப் பற்றி மேலும் பேசிய அவர் ” இந்திய பேட்ஸ்மேன் கல் சுடர் பொந்து வீச்சை ஆடுவதில் வல்லவர்கள் . அதற்காக நான் ரண்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பந்து வீசப் போவதில்லை . மாறாக தாக்குதல் பாணியில் பந்துவீசி விக்கெட்டுகளை குறி வைக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

” சஞ்சு சாம்சன் கடந்த சில வருடங்களாக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார் அவரது விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும்” என்று தெரிவித்தார். மேலும் இந்திய அணியுடன் விளையாடும் போது அதிகமான பார்வையாளர்கள் போட்டியை ரசிக்க வருவார்கள், மைதானத்தில் ஆரவாரம் அதிகமாக இருக்கும் இது போட்டியை மேலும் சுவாரசியமாக்கும் என்றும் தெரிவித்தார். நாம் நம்பிக்கை வைத்து விளையாடினால் இந்தியா மட்டுமல்ல எந்த அணியையும் போராடி வீழ்த்தலாம் என்று கூறினார். இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது போட்டி நாளை டப்லின் நகரில் வைத்து நடக்க இருக்கிறது.