“இந்தியாவோட பவுலிங் எப்பவுமே வீக் நாங்க தான் வின் பண்ண போறோம்” – பாகிஸ்தான் வீரர் பரபரப்பு பேச்சு!

0
412

2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை அட்டவணை வெளியிடப்பட்டதிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்ற போட்டி குறித்தான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்க துவங்கியிருக்கிறது .

2023 ஆம் ஆண்டின் 50 ஓவர் உலகக் கோப்பை அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் துவங்கி இந்தியாவில் நடைபெற இருக்கிறது . இந்தப் போட்டிகளில் வருகின்ற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வைத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற இருக்கிறது .

- Advertisement -

உலகிலேயே அதிக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் கண்டுபிடிக்கக்கூடிய மைதானமான நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து இந்த போட்டி நடைபெற உள்ளது . இந்தப் போட்டிக்கான கணிப்புகள் மற்றும் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை பற்றிய விவாதங்களை கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் இப்போதே துவங்கி விட்டனர் .

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் இந்தப் போட்டி குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார் . பாகிஸ்தானைச் சேர்ந்த நாதிர் அலி என்பவரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சயீத் அஜ்மல் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார் .

இதுகுறித்து பேசி இருக்கும் சயீத் அஜ்மல் ” இந்திய அணியின் பந்துவீச்சு எப்போதுமே பலவீனமாக இருந்திருக்கிறது . அந்தப் பந்துவீச்சை வைத்துக் கொண்டு பாகிஸ்தான் வீரர்களை கட்டுப்படுத்த முடியாது . பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் போன்ற திறமையான பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் அணியில் தற்போது இருக்கின்றனர் ” என்று தெரிவித்தார் .

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் ” இந்திய அணியை பொறுத்தவரை முகமது சிராஜ் சமீபகாலமாக நன்றாக பதிவு கொண்டிருக்கிறார். முகமது சமியும் நல்ல பந்துவீச்சாளர். ஸ்பின் பௌலிங்கை பொறுத்த வரை ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்கு முக்கியமானவராக இருக்கிறார். பும்ரா நிச்சயமாக பாகிஸ்தான் அணிக்கு அபாயகரமான ஒரு பந்துவீச்சாளர் . ஆனால் அவர் இன்னும் உடல் தகுதியை பெறவில்லை உலகக்கோப்பையில் பங்கேற்பாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது . இதனால் இந்திய அணியின் பந்துவீச்சு வீக்காகவே உள்ளது” என்று கூறினார்.

பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து பேசிய அஜ்மல் ” இந்தியா வலுவான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற அபாயகரமான பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர் . அதே நேரத்தில் பாகிஸ்தான் அணிலும் அபாயகரமான பந்துவீச்சாளர்கள் உள்ளனர் . இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி என்றாலே அதே பாகிஸ்தானின் பந்துவீச்சு மற்றும் இந்தியாவின் பேட்டிங்கிற்கு எதிரான போட்டி தான் . இதனால் என்னுடைய கணிப்பின்படி பாகிஸ்தான் அணிக்கு 60 சதவீதம் வெற்றிக்கான வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.