உலகக்கோப்பை குவாலிபயர்: இலங்கை அணி ரெக்கார்ட் ப்ரேக்கிங் வெற்றி! அயர்லாந்து அணியை அப்செட் செய்த கத்துக்குட்டி ஓமன் அணி! – பரபரப்பின் உச்சத்திற்கு செல்லும் குவாலிபயர் லீக் போட்டிகள்!

0
2946

இலங்கை அணி 175 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது. ஓமன் அணி பரபரப்பான போட்டியில் அயர்லாந்து அணியை கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்று வீழ்த்தி பேரதிர்ச்சியை கொடுத்தது.

உலகக்கோப்பை குவாலிஃபயர் போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது.

- Advertisement -

நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நான்கு பேர் அரை சதம் அடித்தனர்.

பதும் நிஷன்கா(57), கருநரத்னே(53), குஷால் மெண்டிஸ்(78), சமரவிக்ரமா(73) ஆகிய நால்வரும் கடைசி தான் அடிக்க, அசலங்கா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் அடித்திருந்தார். 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 355 ரன்கள் அடித்தது இலங்கை அணி.

இந்த இலக்கைச் சேஸ் செய்த ஐக்கிய அரபு அமீரக அணியை பவுலிங்கில் மிரட்டினார் ஹசரங்கா. இவர் 8 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐக்கிய அரபு அமீரக அணி 39 ஓவர்களில் 180 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக, அலி நசார் 34 ரன்கள் அரவிந்த் 39 ரன்கள் அடித்திருந்தனர்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் அயர்லாந்து மற்றும் ஓமன் ஆகிய இரு அணிகளும் மோதின. இந்த இரு அணிகளுமே பி பிரிவில் இடம் பெற்றுள்ளன.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு டாக்ரல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் அடித்தார். ஹாரி டெக்டர் 52 ரன்கள் அடித்தார். மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆங்காங்கே 20 ரன்கள் அடித்துக்கொடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த, 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி ஏழு விக்கெடுகள் இழப்பிற்கு 281 ரன்கள் அடித்திருந்தது.

இலக்கை துரத்திய ஓமன் அணிக்கு துவக்க வீரர் ஜதிந்தர் சிங் 1 ரன்னில் வெளியேறினார். இரண்டாவது விக்கெட்டுக்கு காஷ்யாப், இல்லியாஸ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து நம்பிக்கையளித்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 94 ரன்கள் சேர்த்தது.

இல்லியாஸ் 52 ரன்களுக்கு அவுட் ஆனார். துவக்க வீரர் காஷ்யாப் 72 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த ஜீஷன் மாக்ஸூத் 59 ரன்கள் அடித்துக்கொடுத்து ஆட்டமிழந்தார். ஆங்காங்கே நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஓமன் அணி இலக்கை எளிதாக நெருங்கி வந்தது.

பின்னர் வந்த அயான் கான் 21 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி வரை களத்தில் நின்று பரபரப்பாக கடைசி ஓவர் வரை சென்ற ஆட்டத்தை ஓமன் அணிக்கு சாதகமாக முகமத் நதீம்(49), சோயிப் கான்(19) இருவரும் முடித்துக் கொடுத்தனர்.

48.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் அடுத்து ஐந்து விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஓமன் அணி. உலக கோப்பைக்கு தேர்வாகி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான அயர்லாந்து அணி இப்படி ஓமன் அணியிடம் அப்செட் ஆனது பெருந்து ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

உலககோப்பை தொடரில் நடைபெறும் போட்டிகளைப் போலவே குவாலிஃபயர் போட்டியிலும் பரபரப்பு சற்றும் குறையாமல் இருந்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, அயர்லாந்து ஆகிய பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடும் அணிகள் வெற்றியை எளிதாக்கி விடாமல் இறுதிவரை போராடி வருகின்றன.