2022 ஐ.பி.எல் தொடரின் முதல் ஹாட்ரிக் ; அதை புதுவிதமாக கொண்டாடிய சாஹல் – வீடியோ இணைப்பு

0
153
Yuzvendra Chahal Hattrick

ஐ.பி.எல் பதினைந்தாவது சீஸனின் முப்பதாவது ஆட்டத்தில், மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில், புள்ளி பட்டியலில் ஐந்தாமிடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியும், ஆறாவது இடத்திலிருக்கும் கொல்கத்தா அணியும் மோதி வருகின்றன.

ராஜஸ்தான் அணியில் கருண்நாயரும், மெக் காயும் உள்ளே வர, வான்டர் டெசனும், குல்தீப் சென்னும் வெளியேபோய் இருந்தார்கள். கொல்கத்தா அணியில் சிவம் மாவி உள்ளே வந்ளே வர, அமன் ஹக்கீம் கான் வெளியேறி இருந்தார்.

- Advertisement -

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் பீல்டிங்கை தேர்வு செய்ய, ஜோஸ் பட்லர் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டார். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அதிரடிதான். இவருக்கு படிக்கல்லும், சஞ்சு சாம்சனும் சரியான ஒத்துழைப்பு தந்தார்கள். பட்லர் சதமடிக்க, ஹெட்மயர் இறுதியில் அதிரடி காட்ட கொல்கத்தா 217 ரன்களை குவித்தது.

அடுத்து ஆடிய கொல்கத்தா அணிக்கு பின்ச்சும், ஸ்ரேயாசும் அதிரடி துவக்கம் தந்ததோடு, அணியை வெற்றிக்குப் பக்கத்தில் எடுத்து வந்துவிட்டனர். கடைசி நான்கு ஓவர்களில் நாற்பது ரன்கள் தேவைப்பட, 17 வது ஓவரில் சாஹல் முதல் பந்தில் வெங்கடேஷை வெளியேற்றி, நான்காவது பந்தில் ஸ்ரேயாஷ், ஐந்தாவது பந்தில் மாவி, ஆறாவது பந்தில் கம்மின்ஸை வெளியேற்றி அட்டகாசமாக ஹாட்ரிக் அடித்ததோடு அந்த ஓவரில் நான்கு விக்கெட்டுகளையும், மொத்தமாக ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார்!

- Advertisement -
- Advertisement -