வீடியோ: பாத்தாலே தெரியுது பேட்ல பட்டது.. ஆனாலும் ரிவியூ கேட்டு மீம்ஸ் கண்டெண்ட் ஆன பங்களாதேஷ் அணி!

0
259

பந்து பேட்டில் தான் பட்டதென்று தெளிவாக தெரிந்தும், ரிவியூ கேட்டு பங்களாதேஷ் அணி அசிங்கப்பட்ட சம்பவம் இங்கிலாந்து அணிகெதிரான போட்டியின்போது நிகழ்ந்துள்ளது.

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதற்கட்டமாக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி டாக்கா மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் ஜேசன் ராய் அபாரமாக சதம் அடித்தார். இவர் 132 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். கேப்டன் ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்து, 76 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

கீழ் வரிசையில் வந்த மொயின் அலி(42) மற்றும் சாம் கர்ரன்(33) இருவரும் அதிரடியாக விளையாடியதால், 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட்ஸ் இழப்பிற்கு 326 ரன்கள் அடித்தது.

- Advertisement -

மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்த பங்களாதேஷ் அணிக்கு கேப்டன் தமீம் இஃபால் 35 ரன்கள் அடித்து அவுட்டானார். சாகிப் அல் ஹசன் 58 ரன்களும், மகமதுல்லா 32 ரன்களும் அடிக்க மற்ற வீரர்கள் எவரும் பெரிதளவில் சோபிக்காததால், 45 வது ஓவரில்194 ரன்களுக்கு பங்களாதேஷ் அணி ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. 3வது ஒருநாள் போட்டி மார்ச் 6ல் நடக்கிறது.

பங்களாதேஷ் வீரர்கள் செய்த காமெடி சம்பவம்

இப்போட்டியில் பங்களாதேஷ் வீரர்கள் செய்த செயலால் இணையத்தில் கடும் கிண்டல்களை சந்தித்து வருகுறது. மேலும் மீம்ஸ் கன்டென்ட் ஆகவும் தற்போது மாறியுள்ளது.

போட்டியின் 48 வது ஓவரில் பேட்டிங் செய்துகொண்டிருந்த அடில் ரஷீத்-க்கு யார்க்கர் வீசினார் தஸ்கின் அகமது. அதை நன்றாக பேட்டில் தடுத்துவிட்டார். பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தும் எல்பிடபிள்யூ அப்பீல் செய்ததற்கு களத்தில் இருந்த நடுவர் நாட்-அவுட் இல்லை என்று கொடுத்துவிட்டார்.

பங்களாதேஷ் வீரர்கள் அத்துடன் நிற்கவில்லை. கேப்டன் தமீம் இஃபால் ரிவியூ எடுத்தார். அப்போது ரீ-ப்ளை செய்து பார்த்ததில் இன்னும் தெளிவாக பேட்டில் பட்டது தெரிந்தது. இவ்வளவு மோசமாக ரிவியூ எடுத்த பங்களாதேஷ் வீரர்கள் சமூக வலைதளங்களில் கடும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளனர்.

பங்களாதேஷ் அணியினர் இதற்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளிலும் இப்படி மோசமான ரிவ்யூ எடுத்த வரலாறும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே: