ராஜாக்களுக்கு தலைவணங்கி மரியாதை செய்வதுபோல் தினேஷ் கார்த்திக்கு மரியாதை செய்த விராட் கோலி – வீடியோ இணைப்பு

0
3018
Virat Kohli bowing down to Dinesh Karthik

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் பெங்களூரு அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டுள்ளது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஃபேப் டு பிளேசிஸ் 50 பந்துகளில் 73* ரங்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடைசி நேரத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் நான்கு சிக்சர் உட்பட 30* ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்

தினேஷ் கார்த்திக்கு தலைகுனிந்த விராட் கோலி

பெங்களூர் அணி இன்றைய ஆட்டத்தில் 160 ரன்கள் போல குவிக்கும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் கடைசி நேரத்தில் களமிறங்கி 8 பந்துகளில் 30* ரன்கள் குவித்து பெங்களூரு அணியின் ஸ்கோரை 190 க்கு தினேஷ் கார்த்திக் எகிற வைத்தார்.

மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் தினேஷ் கார்த்திக் பெவிலியன் நோக்கி நடந்து செல்கையில் கைதட்டி உற்சாகப்படுத்தினர். தினேஷ் கார்த்திக் டிரெஸ்சிங் ரூமிற்கு சென்ற பொழுது அங்கே நின்று கொண்டிருந்த விராட் கோலி தலைகுனிந்து தினேஷ் கார்த்திக்கை வரவேற்றார்.

பொதுவாக ராஜாக்களுக்கு மரியாதை செய்வது போல் தனது கையை நீட்டி தினேஷ் கார்த்திக்கு விராட்கோலி தலைவணங்கினார். விராட் கோலி அவ்வாறு விராட் கோலி தலைவணங்கிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் மொத்தமாக 274 ரன்கள் குவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 68.5 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 200 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுபக்கம் 12 போட்டிகளில் விளையாடி 7இல் வெற்றிகண்டு தற்போது பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.