வீடியோ: டேய் அமைதியா இருடா.. கவாஜா மேல் பந்தை எறிந்த கேஎஸ் பரத்… சட்டென்று திட்டிய விராட் கோலி!

0
210

கேஸ் பரத் தூக்கி எறிந்த பந்து, பேட்டிங் செய்து கொண்டிருந்த கவாஜா மீது பட்டதால் அருகில் இருந்த விராட் கோலி சட்டென்று பரத்தை திட்டினார். இந்த சம்பவம் ஸ்டம்ப் கேமராவில் வசமாக சிக்கியது.

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை அனாசமாக எதிர் கொண்டு ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

முதல் நாள் ஆட்டத்தில் துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியான அணுகுமுறையுடன் விளையாடினார்ம் இவர் 32 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த லபுஜானே வெறும் மூன்று ரன்களுக்கு போல்ட் ஆகி ஆட்டமிருந்தார்.

கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கி துவக்கத்தில் இருந்து மிகவும் நிதானத்துடன் அணுகினார். விக்கெட் இழந்து விடக்கூடாது என்கிற முனைப்பு தெளிவாக தெரிந்தது. ஆனால் ஜடேஜாவின் சிறப்பான பந்துவீச்சில் சிக்கி போல்டானார். இவர் 38 ரன்கள் அடித்திருந்தார்.

மறுமுனையில் நங்கூரம் போல நிலைத்து ஆடி வந்த உஸ்மான் கவஜா அரைசதம் கடந்தும் அவசரம் காட்டாமல் அதே நிதானத்தை தொடர்ந்தார். போட்டியின் கடைசி ஷெசனில் உள்ளே வந்த கேமரூன் கிரீன் தனது அதிரடியை வெளிப்படுத்த ஆஸ்திரேலியாவின் போக்கு முற்றிலுமாக மாறியது.

- Advertisement -

கிரீன் வந்த பிறகு அணியின் ஸ்கோர் விரைவாக உயர்ந்தது. முதல் நாள் முடிவில் 255 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் ஆஸி., அணி இருந்தது. கவாஜா சதத்துடனும் கேமரூன் கிரீன் 49 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

முதல்நாள் ஆட்டத்தின் 71வது ஓவரின்போது, கேஎஸ் பரத் மற்றும் கவாஜா இருவருக்கும் இடையே நடந்த சலசலப்பு மற்றும் அதற்கு விராட் கோலி பரத்தை திட்டியது என சம்பவம் ஸ்டம்ப் கேமராவில் வசமாக சிக்கியது. இதன் வீடியோவை கீழே பார்ப்போம்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு கிரீன் மற்றும் கவாஜா இருவரும் மீண்டும் விக்கெட் விடாமல் இந்திய பவுளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர். அரைசதம் கடந்து, கேமரூன் கிரீன் ஆடிவருகிறார். உஸ்மான் கவஜா 150 ரன்கள் எட்டிவிட்டார். உணவு இடைவேளைக்கு முன்பு வரை ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் அடித்துள்ளது.