விக்கெட் வீழ்த்தியப் பின் டேல் ஸ்டெயினைப் போலவே கொண்டாடிய உம்ரான் மாலிக் – வீடியோ இணைப்பு

0
355
Umran Malik wicket celebration like Dale Steyn

2022 ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 40வது போட்டி, கேன் வில்லியம்சனின் ஹைதராபாத் அணிக்கும், ஹர்திக் பாண்ட்யாவின் குஜராத் அணிக்கும் இடையே மும்பை வான்கடேவில் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. பனிப்பொழிவு இல்லையென்பது குறிப்பிடத்தக்கது!

முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பீல்டிங்கை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணிக்கு இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மாவும், எய்டன் மார்க்ரமும் அரைசதங்களைத் தர, இறுதிநேரத்தில் ஷாசாங்க் சிங் ஆறே பந்தில் 25 ரன்களை அடிக்க, நிர்ணயிக்குப்பட்ட இருபது ஓவரில் 195 ரன்களை குவித்தது ஹைதராபாத் அணி.

- Advertisement -

அடுத்து 196 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய குஜராத் அணியின் சுப்மன் கில்லும், விருதிமான் சகாவும், பவர்-ப்ளேவில் பிரமாதப்படுத்தி, ஒவரக்கு பத்து ரன்கள் என்கின்ற அளவில், ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கினார்கள்.

பவர்-ப்ளே முடிந்து, இந்தியாவின் அதிவேக பவுலரான உம்ரான் மாலிக்கிடம் கேன் வில்லியம்சன் பந்தை தர, ஆட்டத்தில் அனல் பறக்க ஆரம்பித்தது. உம்ரான் மாலிக் வந்தவுடன் சுப்மன் கில்லை “டாப் ஆப் த ஆப் ஸ்டம்ப்மை” தட்டி போல்டாக்கி வெளியே அனுப்பானார்.

சுப்மன் கில் வெளியேறியதும் அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் தோள்களைத் தாக்கினார். அதற்கடுத்து ஓவரில் திரும்ப வந்து, புல்-ஷாட் அடிக்க இடமும், நேரமும் தராமல் வீசி, ஹர்திக் பாண்ட்யாவை புல்-ஷாட் ஆடவைத்து எட்ஜ் எடுக்க வைத்து, தேர்ட்-மேன் திசையில் யான்சென்னிடம் கேட்ச் ஆக்கி அசத்தினார். இந்த இரண்டு விக்கெட்டுகளின் போதும், அவரது வெற்றிக் கொண்டாட்டம், தற்போதைய அவரின் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினின் விக்கெட் கொண்டாட்டத்தைப் போலவே இருந்தது. இப்போது பந்துவீச்சில் ஸ்டெயின்தான் இவரை மெருகேற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -