வீடியோ: கீப்பரை தாண்டி பறந்த போல்டு.. ஸ்டம்ப்பை தெறிக்கவிடுறதுல நீ மட்டுமில்ல, நானும் ஸ்பெசலிஸ்ட் என ஸ்டார்க்-க்கு காட்டிய உமேஷ் யாதவ்!

0
1792

ஸ்டார்க் பாணியில், அவரது விக்கெட்டையே ஸ்டம்ப்பை தெறிக்கவிட்டு கெத்தாக எடுத்தார் உமேஷ் யாதவ். வீடியோ கீழே உள்ளது.

பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியைப் பெற்று முன்னிலையுடன் இந்திய அணி களமிறங்கியது.

- Advertisement -

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா சுழல் பந்துவீச்சாளர்கள் அச்சுறுத்தலாக இருந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி 109 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கவாஜா 60 ரன்கள், லபுஜானே 31 ரன்கள், ஸ்மித் 29 ரன்கள் என நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழக்க, முதல் நாள் முடிவில் 156 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆஸ்திரேலியா அணி.

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய போது, களத்தில் கேமரூன் கிரீன் மற்றும் பீட்டர் ஹான்ஸ்கோம் இருவரும் இருந்தனர். துவக்கத்தில் விக்கெட்டுகள் விட்டுக் கொடுக்காமல் நன்றாக தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

நாளின் ஆரம்பத்தில் 15 ஓவரர்களுக்கும் மேல் விக்கெட்டுகளை விழவில்லை. அதன் பிறகு சிறிய இடைவேளையை எடுத்துக்கொண்டு மீண்டும் பந்துவீசிய இந்திய அணிக்கு வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தன.

ஸ்பின்னர்கள் விக்கெட்டுகளை எடுக்க தடுமாறி வந்தபோது, வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் கேமரூன் கிரீனை எல்பிடபிள்யூ செய்தார். அப்போதிருந்து ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்பியது. அடுத்த ஓவரில் மிட்ச்சல் ஸ்டார்க் விக்கெட்டை போல்டு செய்து எடுத்தார். அதற்கு அடுத்த ஓவரில் இன்னொரு விக்கெட் எடுக்க மொத்தம் ஐந்து ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார் உமேஷ் யாதவ். இன்னிங்ஸ் இறுதியில் 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணி.

மிட்ச்சல் ஸ்டார்க் விக்கெட் உமேஷ் யாதவ் வீழ்த்திய விதம் பார்ப்பதற்கே மிகவும் நேர்த்தியாக இருந்தது. இதன் வீடியோ கீழே: