கிரிக்கெட்

1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது சிட்னி சிக்சர்ஸ் பேட்ஸ்மேனை துரத்தி விட்டு திடீரென்று பேட்டிங் செய்ய வந்த உதவி பயிற்சியாளர் – வீடியோ இணைப்பு

ஆஸ்திரேலியாவில் தற்போது பிக் பேஷ் தொடர் நடந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வரும் இந்த தொடரில் பல முன்னணி வீரர்கள் விளையாடி வந்தனர். கொரோனா தொற்று காரணமாக இந்தத் தொடரில் பல வீரர்கள் பாதிக்கப்பட்டாலும் தொடர் வெற்றிகரமாக நடந்து வருகிறது. தற்போது லீக் போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று நடந்து வருகின்றது. ஏற்கனவே பெர்த் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. பெர்த் அணியுடன் இறுதிப் போட்டியில் மோத இருக்கும் அணி எது என்று நிர்ணயம் செய்யும் போட்டியில் அடிலைட் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின.

- Advertisement -

சிட்னி அணி டாஸ் வென்று அடிலைட் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. ஆரம்பத்தில் அடியில் இறங்கி வேகமாக விக்கெட்டுகளை இழந்தாலும் அந்த அணியின் காக்பைன் மற்றும் வெல்ஸ் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை 167 வரை கொண்டு சென்றனர். சற்று சிக்கலான இலக்கை துரத்திய சிட்னி துவக்க வீரர் ஜஸ்டின் ஏமாற்றினார். அடுத்து வந்த கார்டர் 10 ரன்களுக்கும் ஹென்றிக்ஸ் 13 ரன்களுக்கு ஆட்டம் இழக்க அந்த அணி தடுமாறியது.

ஆனால் சிறப்பாக விளையாடிய கெர் மற்றும் அபாட் ஜோடி வேகமாக ரன்கள் சேர்த்தது. ஆனால் ஆட்டத்தின் முக்கியமான நேரங்களில் மீண்டும் விக்கெட்டுகளை இழக்க தொடங்கிய சிட்னி அணிக்கு தனியாளாக கெர் அரைசதம் கடந்து அசத்தினார். இவரது கேட்சை அடிலைட் அணியின் ரென்ஷா ஆட்டத்தின் ஆரம்பத்தில் தவற விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்னி அணி கடைசி பந்தில் வெற்றிபெற 2 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் சில்க் மற்றும் கெர் இருந்தனர். ஹாம்ஸ்டிரிங் காரணமாக அவதிப்பட்ட சில்க் ஓடுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். ஆனால் கடைசி பந்தில் நிச்சயம் வேகமாக ஓட வேண்டியது இருக்கும் என்பதால் சில்க் காயம் என்று முறையிட்டு வெளியேறினார். அதன் காரணமாக அந்த அணியின் உதவி பயிற்சியாளர் லெண்டன் களத்திற்குள் வந்தார். அந்த அணியின் வழக்கமான விக்கெட் கீப்பர் ஜோஸ் பிலிப்பி கொரோனா காரணமாக அணியில் இருந்து விலகியதும் உதவி பயிற்சியாளர் விளையாட வேண்டியதாகிவிட்டது.

- Advertisement -

கடைசிப் பந்தில் அடிலெய்டு வீரர் எளிதான பீல்டிங் வாய்ப்பை தவறவிட கெர் அடித்த பந்து பவுண்டரி ஆக மாறியது. இதன் காரணமாக இனி அணி இறுதிப்போட்டியில் பெர்த் அணியை சந்திக்க உள்ளது. கடைசி பந்தில் காயம் எனக்கூறி சில்க் விலகியது சமூக வலைதளங்களில் பெருவாரியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Published by