கால்பந்து செய்திகள்

ஐஎஸ்எல் கால்பந்து: மோகன் பகான் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி எப்சி சாம்பியன்.. அசத்தல் பரிசுத்தொகை

ஐபிஎல் போல ஐஎஸ்எல் என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்று வந்த இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை அணியும், நடப்புச் சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜெயின்ஸ் அணியும் மோதிய போட்டியில் மும்பை சிட்டி எப்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

- Advertisement -

2023-2024க்காண பத்தாவது சீசன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்த சீசனில் மோகன் பகான் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 22 போட்டிகளில் 15 வெற்றிகளையும், நான்கு தோல்விகளையும், மூன்று ட்ராவையும் பெற்றுள்ளது. 48 புள்ளிகளை பெற்ற மோகன் பகான் அணி புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் உள்ளது.

அரையிறுதி போட்டியில் ஒடிசா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மோகன் பகான் அணியை பொறுத்தவரை இதுவரை நான்கு முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதுவே மும்பை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 22 போட்டிகளில் 14 வெற்றிகளையும், மூன்று தோல்விகளையும், ஐந்து டிராக்களையும் பெற்றுள்ளது.

மோகன் பகான் அணி அரையிறுதி போட்டியில் கோவா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற நிலையில் ஆட்டத்தின் முதல் பாதியில் 44வது நிமிடத்தில் மோகன் பகான் அணியின் ஜேசன் கம்மிங்ஸ் முதல் கோல் அடிக்க, முதல் பாதியில் பின்தங்கிய நிலையில் இரண்டாவது பாதியில் மும்பை அணி தனது சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியது.

- Advertisement -

1-0 என்ற கணக்கில் இரண்டாவது பாதியில் தொடங்கிய மும்பை அணி, அணி வீரர்கள் ஜார்ஜ் பெரேரா டயஸ், பிபின் சிங் மற்றும் ஜக்குப் வோஜ்டஸ் ஆகியோரின் கோல்கள் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது. முதல் பாதிக்குப் பிறகு மும்பை அணியின் பயிற்சியாளர் பீட்டர் கிராட்கியின் உத்வேகம் அளிக்கும் பேச்சு மும்பை அணி வீரர்களை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தர தூண்டியது.

இதனால் இரண்டாம் பாதியில் இறுதியில் வரிசையாக மூன்று கோல்கள் அடித்த மும்பை அணி நடப்பு சாம்பியன் மோகன் பகான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதுவரை ஒரு முறை கோப்பையை கைப்பற்றியுள்ள மும்பை அணி இந்த முறையும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெரும் அணிக்கு 6 கோடி ரூபாய் பரிசு தொகையும், இரண்டாவது இடம் பெறும் அணிக்கு 2.50 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.

Published by
Tags: FootballISL